பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

browser 104 bubble

bubble : கட்டளை: தேடு கட்டளைகளின் மூலம் செங்குத்தாக புலம் வாரியாக வும், கிடைமட்டமாக வரிசையாக வும் அல்லது திரை முழுவதும் தேடு வதற்கு முடியும். பொருள் சார்ந்த ஆணைத் தொடர் மொழிகளிலும் தேடுவதற்குப் பயன்படும்.

browser : மேலோடி : ஆணைத் தொடர் மொழி அளிக்கின்ற கருவி வரிசை முறையைப் பார்க்க, ஆணைத் தொடர் அமைப்பவருக்கு அனுமதி அளித்து பொருள் - சார்ந்த மொழிகளில் குறியீட்டை திருத்த உதவும்.

browser/web browser : Cow Count/ வலை மேலோடி : வலையில் ஆவணங்களைத் தேடிப் பெறவும், ஆவணத்திலிருந்து ஆவணத்திற்கு இணைப்புப் பின் தொடரவும் அனு மதிக்கும் மென்பொருள் ஆணைத் தொடர். இணையத்தில் பயன் படுவது.

browsing : உலாவுதல்; நோட்டமிடல்: தேவையில்லாமல் கணினி பட்டியல் களிலோ அல்லது கோப்புகளிலோ சுவையான செய்தி கிடைக்காதா என்று தேடுதல். brush : தூரிகை : கணினி வரைபடங் களில் ஜாய்ஸ்டிக், பேடில் அல்லது அதைப்போன்ற உள்ளீட்டுச் சாதனங் களின் மூலம் காட்சித் திரையின் எந்தப் பகுதியிலும் நகர்த்தக் கூடிய வண்ண ம் தரும் சாதனம்.

brute-force technique : முரட்டு விசை தொழில் நுட்பம்.

BSAM (Bee Sam) : பி.சாம் : Basic Sequential Access Method என்ப தன் குறும் பெயர்.

BSC : பிஎஸ்சி : Binary Synchronous Communication என்பதன் குறும் பெயர். தகவல் அனுப்புவதற்குப் பயன்படும் ஒரு செயல் முறை.

BSN :பிஎஸ்என் : Business Subscriber Network என்பதன் குறும் பெயர்.

b-spline :பி-ஸ்ப்ளைன் : கணினி வரைகலையின் தொடர்ச்சியை உறுதி செய்யும் கணித வாய்ப்பாட்டைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் வளைவு.

BTAM: பிடாம்: Basic Telecommunica tion Access Method என்பதன் குறும் பெயர். தொலை தூர சாதனங் களுடன் படித்து எழுதி தொடர்பு கொள்ள அனுமதிக்கும் ஒரு அணுகு முறை.

B-tree : பி.மரம் : Balanced Tree என்ப தன் குறும் பெயர். தகவல் தொகுப்பு களின் தகவல் இருக்கும் இடத்தைக் காட்ட ஏற்பாடு செய்யும் ஒரு வழி. இதன் மூலம் எந்த ஒரு குறிப்பிட்ட பதிவையும் உடனடியாகத் திரும்பப் பெற முடியும்.

btrieve : பிட்ரீவ் : நாவல் (Novell) நிறு வனத்தின் தகவல்தள மேலாண்மை அமைப்பு. இயக்க அமைப்பு அளிக் கப்படுகிறது.

bubble: குமிழ் : குமிழ் வரைபடத்தில் ஒரு குறியீடு அல்லது குமிழ் நினை வகத்தில் துண்மி.

bubble chart : குமிழ் வரைபடம் : குமிழ் போன்ற குறியீடுகளை அதி கம் பயன்படுத்தி தகவல் ஓட்ட வரை படங்களை உருவாக்கும் வரைபடம்.

bubble memory : குமிழ் நினைவகம் : காந்தப் புள்ளிகளாக தகவலை சேமித்து வைக்கும் முறை. ஒரு மெல் லிய, மின்கடத்தாப்பொருளால் ஆன படலத்தின் (film) மீது குமிழ்கள் நிற்கின்றன. அழியாத இருப்பகத் திறனை இது அளிக்கிறது.