பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

bureau 107 bus

bureau : அலுவலகம் : தகவல் செய லாக்கச் சேவைகளை வேறொரு நிறு வனத்திற்கு அளிக்கும் நிறுவனம்.

bum : எரித்தல் : மிக அதிக மின்சக்தி அல்லது வெப்பத்திற்கு உள்ளாக்கி மின்சுற்றை அழித்தல்.

burn-in : உள்ளெரித்தல் : உயர்த்தப் பட்ட வெப்பநிலையில் அடுப்பில் மின்சுற்றுகளை இயக்குவதன் மூலம் மின்சுற்றுகள் மற்றும் பாகங்களைச் சோதனை செய்யும் முறை. கணினி பாகங்களை தொடர்ச்சியாக ஒரு வாரத்திற்கு 50 டிகிரி செல்ஷியஸ் வெப்ப நிலையில் இயக்குவது ஒரு சராசரியான சோதனை. இதன்மூலம் பலவீனமான மின்சுற்றுகள் எரிந்து போய் சோதனைகளைத் தாங்கும் பாகங்கள் மட்டும் மிஞ்சும்.

burning: எரித்தல்: படிக்க மட்டுமான நினைவகத்தில் (Rom) ஆணைத் தொடர் பதித்தல்.

Burroughs adding machine : பரோஸ் கூட்டல் எந்திரம் : 1884இல் வில்லியம் பரோஸ் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட முதல் வணிக முறையிலான கூட்டும், பட்டிய லிடும் எந்திரம், வகைப் பலகை மற்றும் அதன் தொழில் நுட்பம் இன்னும் கைகளால் இயங்கும் சில எந்திரங்களில் அப்படியே மாறாமல் உள்ளது.

Burroughs Corporation : பரோஸ் நிறுவனம் : கணினிக் கருவிகளை அதிக அளவில் உற்பத்தி செய்யும் நிறுவனம்.

Burroughs William Seward (1857 1898): பரோஸ் வில்லியம் சீவார்ட் (1857-1898) : முதல் வணிக முறை யிலான கூட்டல் எந்திரத்தைக் கண்டு பிடித்தவர். இன்றைய பரோஸ் கார்ப்பரேஷன் அந்த எந்திரத்திலிருந்து தான் துவங்கியது.

burst : வெடித்த : 1. கணினி செயல் பாடுகளில், தொடர்ச்சியான காகிதத் தில் இருந்து தனித் தாள்களைப் பிரித் தல். 2. தகவல் அனுப்புதலில் ஒரே அலகாகக் கணக்கிடப்படும் சமிக்ஞைகளின் தொடர்ச்சி.

burster : வெடிப்பி : பல பக்கங்கள் உள்ள கணினி அச்சு வெளியீட்டி னைப் பிரிக்கும் ஒரு எந்திர சாதனம். நகல்களைப் பிரித்து கார்பன் தாள் களை எடுக்கிறது.

burst errors : வெடித்த பிழைகள் : தகவல் தொடர்புகளின் போது மிக நெருக்கத்தில் (வெடிப்பில்) ஏற் படும் தொடர் பிழைகள் நடைமுறை யில் பெரும்பாலான பிழைகள் நெருக்கத்தில் (வெடிப்பில்) தான் ஏற் படுகின்றன.

burst mode : வெடிக்கும் முறை: தடை செய்ய முடியாத முறையில் தகவல் களைப் படிக்கும் அல்லது எழுதும் முறை.

burst mode transfer : வெடிப்பு முறை மாற்றல் : குறுவட்டு (CD-Rom)விலிருந்து தகவல் மாற்றல் . சராசரி தகவல் மாற்றல் விகிதமான 150 கிலோ எட்டியல்/நொடி / (முறை 1) அல்லது 171 கிலோ எட்டியல்கள்/ நொடி (முறை 2) ஆகியவற்றை விட பல மடங்கு பெரியது. (SCSI) தொகுதியைவிட அதிக வேகத்தை இது எடுக்க முடியும்.

bursting : வெடித்தல் : தொடர்ச்சி யான படிவ காகிதத்தைத் தனித் தூள் களாகப் பிரிக்கும் செயல்முறை.

bus : மின் இணைப்புத் தொகுதி : தகவல் மற்றும் மின் சமிக்ஞைகளை மாற்றுவதற்கான பாதை அல்லது வழித்தடம்.