பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

CAGE

113

calligra


பகுதி, உற்பத்திப்பொருள் அல்லது வடிவமைப்பில் உள்ள அமைப்பினை ஆராயவும் பல்வேறு சூழ்நிலைகளில் அதன் செயல்திறனை மாதிரியாகச் செய்து காட்டவும் பயன்படுகிறது.

CAGE : பெட்டி : அச்சிட்ட மின்சுற்று அட்டைகள் ஏற்றப்படும் ஒரு பெட்டி.

CAI: கேய் : Computer-Assisted instruction என்பதன் குறும்பெயர். கணிப்பொறி உதவியுடன் கற்றுத் தரல் என்பதாகும்.

CAL : கால் : Computer Augmented Learning என்பதன் குறும்பெயர். கணினி வலுப்படுத்திய கற்றுத்தரல் என்பதாகும்.

calculated Field : கணக்கிடப்படும் புலம் : பிற புலங்களைக் கணக்கிட்டு பெறப்பட்ட எண் அல்லது தகவல் புலம். பயனாளரால் கணக்கிடப்படும் புலத்தில் தகவல்களை நுழைக்க முடியாது.

calculating : கணக்கிடல் : மதிப்பீடு செய்தல் : சில எண் வகையிலான உண்மைகளைச் சுருக்கி, புதிய தகவலை ஏற்படுத்தல் அல்லது புதிதாக உருவாக்குதல்.

calculations : கணக்கீடுகள் : தகவல்களின் மீது கணித செயல்முறைகள்.

calculator : கணிப்பி : கணக்கீடுகளைச் செயல்படுத்தப் பயன்படுத்தப்படும் எந்திரக் கணித அல்லது மின்னணு எந்திரம். கணினிகளிலிருந்து மாறுபட்ட கணிப்பிகளுக்கு அடிக்கடி மனிதத் தலையீடு தேவைப்படும்.

calculator mode : கணிப்பி நிலை.

calibration : மதிப்பாராய்தல்; அளவீடு செய்தல் : ஒரு கட்டுப்பாட்டுக் குமிழ் கைப்பிடியில் (knob) ஏற்படுத்தப்பட்டுள்ள, நிர்ணயிக்கப்பட்ட சரியான மதிப்பினையோ அல்லது ஒரு மீட்டரில் ஒவ்வொரு அளவை எண்ணிக்கையில், சரியான மதிப்பை நிர்ணயிக்கப்பட்ட தரத்தையோ ஒத்திட்டுப் பார்த்து அல்லது அளந்து முடிவு செய்யும் செயல்முறை.

cal : அழைப்பு : 1. ஒரு குறிப்பிட்ட மூடிய துணைச் செயல்பாட்டுக்குக் கட்டுப்பாட்டை மாற்றுவது. 2. தகவல் தொடர்பில், அழைக்கும் நபர் செய்யும் செயல், அல்லது ஒரு அழைப்பினைச் செய்வதற்கு தேவையான செயல்பாடுகள் அல்லது இரு நிலையங்களுக்கும் இடையிலே உள்ள இணைப்புகளை மிகத் திறமையாகப் பயன்படுத்துவது.

call by reference : குறிப்பு மூலம் அழைத்தல் : ஆணைத் தொடர் அமைத்தலில், துணை வாலாயமாகப் பயன்படுத்தப்படும் மாறிகளின் நினைவக முகவரிகளையே அளவுகோல்களாக துணை வாலாய முறைக்கு (Subroutine) அனுப்பும் அழைப்பு.

call by value: மதிப்பு மூலம் அழைத்தல் : ஆணைத் தொடர் அமைப்பதில் பயன்படுத்தப்படுவது. துணை வாலாய செயல் முறைகளில் பயன்படுத்தப்படும் அளவுகோல்களின் உண்மை தகவல்களை அவற்றுக்கு அனுப்பும் அழைப்பு.

calligraphic graphics : எழுத்து வனப்பு வரைபடங்கள்; வரி வடிவ வரைவியல் : ஒரு ஒழுங்கில்லாத வகையில் ஒழுங்கில்லாத திசைகளை நோக்கி இழுக்கப்பட்ட கோடுகளைக் கொண்டு ஒரு உருவத்தை அமைத்தல். இதற்கு அதிகச் செலவாகும் மின்னணு தேவைப்படுகிறது. ஆனால், இடஞ் சார்ந்த ஒழுங்களவு கொண்ட இதே.8