பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

error con

தொழில் நுட்பங்கள். 2. தொலைத் தகவல் தொடர்பு கொள்ளும் இரண்டு கணினிகள் தாங்கள் பெற்ற தகவல், பிழை இல்லாதது என்று சோதித்துக் கொள்ளும் செயல் முறை.

error control : பிழைக் கட்டுப்பாடு: செய்தித் தகவல் தொடர்பு அமைப்பில் ஏற்படும் பிழைகளைக் கண்டுபிடிக்கவோ அல்லது திருத்தவோ மென்பொருள் அல்லது வன்பொருள் அமலாக்கப்படும் திட்டம்.

error-correcting code : பிழைத் திருத்தக் குறியீடு ; பிழை திருத்தும் குறிமுறை : ஒரு துணுக்கின் ஈட்டத்தினால் அல்லது இழப்பீட்டினால் ஏற்படும் தடைசெய்யப்பட்ட துடிப்புகளின் இணைப்பிலுள்ள குறியீடு. இது எது தவறானது என்பதைச் சுட்டிக்காட்டுகிறது.

error - detecting code : பிழையறியும் குறியீடு ; பிழையறியும் குறிமுறை : ஒவ்வொரு தொடரும் குறிப்பிட்ட கட்டுமான விதிகளுக்கு இணங்க இருக்குமாறு செய்கிற குறியீடு.

error correction : பிழை திருத்தம் : தகவல் அனுப்பப்படும் கருவிகளில் பிழைகள் ஏற்பட்டால் தானாகவே கண்டுபிடித்து திருத்தம் செய்யும் உள்ளார்ந்த அமைப்பு.

error file : பிழைக் கோப்பு : கணினியால் கண்டுபிடிக்கப்பட்ட பிழையை நிறுத்திவைக்க செயலாக்கத்தின் மீது உருவாக்கப்படும் கோப்பு.

error-free channel: பிழையிலா வழி: புறநிலைக் குறுக்கீடுகளுக்கு உள்ளாகாதிருக்கிற சாதனங்களுக்கிடையிலான கம்பி, கம்பிவடம் போன்ற இடைமுகப்பு.

error guessing : பிழை ஊகித்தல் :

267

escape

சோதனை தகவல் தேர்வு தொழில் நுட்பம். பிழைகள் ஏற்படுத்தக்கூடிய மதிப்புகளைக் கண்டுபிடிப்பதே தேர்வு விதிமுறை.

error handling : பிழை கையாளல் : விசைப்பலகை இயக்குபவர் தவறான விசையை அழுத்திவிட்டால் ஏற்படும் பிழையைக் குறைக்கும் ஆணைத் தொடரின் செயல்.

error message : பிழையைச் சுட்டும்: தவறு சுட்டும் செய்தி : கணினி ஒரு பிழையையோ அல்லது எந்திரக் கோளாறையோ கண்டுபிடித்துவிட்டது என்பதைக் குறிப்பிடும் அச்சிட்ட அல்லது காட்டப்பட்ட சொற்றொடர்.

error rate : பிழை விகிதம் ; பிழை வீதம் : செய்தித் தகவல் தொடர்பு களில், மின்சுற்றுக் கருவியின் தரத்தின் ஒரு அளவு. ஒரு மாதிரி பகுதி யில் உள்ள பிழையான துண்மிகள் அல்லது எழுத்துகள்.

error ratio : பிழை விகிதம் : மொத்த தகவல் அலகுகளில் பிழையான தகவல் அலகுகளின் விகிதம்.

error transmission : பிழை அனுப்புதல்; பிழை பரவல் : அனுப்பும் செயலின்போது தகவல்களில் ஏற்படும் மாற்றம். உள்ளே விழுதல் அல்லது வெளியே விழுதல்.

escape character : இடர்பிழைப்பு எழுத்து: முந்திய எழுத்துகளிலிருந்து மாறுபட்டுப் பொருள் கொள்ள இடமளிக்கும் ஒர் எழுத்து. கட்டுப்பாட்டு எழுத்து. பெரும்பாலும் பிற குறியீடுகளுடன் பயன்படுத்தப்படுகிறது.

escape key: விடுபடுவிசை;விடுபடு சாவி : பெரும்பாலான கணினி விசைப்பலகைகளில் உள்ள கட்டுப்பாட்டு விசை. ஒரு ஆணைத்தொடரை