பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/344

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

hi-tech

342

Hollerith

முறை வெற்றிகரமாக இட அமைவு செய்யப்பட்டிருக்கின்றன என்பதற் கும், ஒரு குறிப்பிட்ட கால அளவின் போது மேற்கொண்ட முயற்சிகளின் மொத்த எண்ணிக்கைக்குமிடையி லான விகிதம்.

hi-tech : உயர்-தொழில்நுட்பம் : உயர் தொழில் நுட்பம் என்பதன் சுருக்கப் பெயர். அண்மைக்காலத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தும் எல்லா வகை வன்பொருள்களையும் இது குறிக்கிறது. Hoff Ted : Ggin)m &ú @LL : 197Ig)ä) இன்டர் கார்ப்பரேஷன் நிறுவனத் தின் பொறியாளரான ஹாஃப் முதல் குறும் நுண் செயலியை (4004) வடி வமைத்தார். அந்த ஒற்றைச் சில்லில் 2250 டிரான்ஸ்சிஸ்டர்கள் இருந்தன. ஒரு முழு மையச் செயலியின் எல்லாக் கருவிகளும் இருந்தன. இந்த குறுஞ்சில் கணினித் தொழி லையும் அதன் விநியோகிப்பாளர் களையும் கணினியின் எதிர்காலப் பங்கு குறித்து சிந்திக்க வைத்தது. hog : பன்றிப் பண்பு : முதன்மை நினைவகம் போன்ற கிடைக்கக் கூடிய ஆதாரங்களை மிகப் பெருமள வில் அல்லது தன்னந்தனியாகப் பயன்படுத்துகிற ஒரு செயல் முறை. hold variable : Sliquomous toms) : 505 மதிப்பளவினை இருத்தி வைத்துக் கொள்வதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு மாறி. எடுத்துக்காட்டு : கட்டுப் பாட்டுப் இடைமுறிவுத் தருக்க முறைக்காக முந்திய பதிவேட்டி லிருந்து மதிப்பளவினை இருத்தி வைததல. holding time : Lillquoment Gossib : 905 செய்தியை அனுப்புவதற்கு ஒரு செய் தித் தொடர்புச் சாதனம் பயன் படுத்தப்படும் கால அளவு.

Hollerith card : GHIDT6dfiğ, Gü sol–: 80 செங்குத்து நிரைகளைக் கொண்ட துளையிடப்பட்ட அட்டை. ஒவ் வொன்றும் மேலிருந்து கீழாக 12 துளையிடுநிலைகளைக் கொண்டது. 80 எழுத்து, எண் தகவல்களை ஏற்கக் கூடியது. 90 செங்குத்து நிரைகள் மற்றும் 96 செங்குத்து நிரைகளைக் கொண்ட அட்டைக்கு மாறானது.

Hollerith code : GHIDmsólfiż GólưS@ : துளையிடப்பட்ட அட்டைகளில் எழுத்து மற்றும் எண்ணைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு வகையான குறியீடு. ஹெர்மன் ஹோலிரித் என் பவரால் பெயரிடப்பட்டது. இவர் தான் துளையிடப்பட்ட அட்டை கணக்கீட்டு முறையை உருவாக்கி யவர். ஒவ்வொரு அட்டை நிரையும் ஒரு எழுத்தைக் கொண்டது. ஒவ் வொரு பதின்ம எண்ணும் எழுத்தும், சிறப்பு எழுத்துகளும், ஒன்று இரண்டு, மூன்று துளைகளால் குறிப் பிடப்படுகின்றன. இவை நிரையின் குறிப்பிட்ட வரிசை நிரல்களில் அமைக்கப்படுகின்றன.

Hollerith, Herman (1860-1929):GoDigo ரித், ஹெர்மன் (1860-1929) : புள்ளி விவர வல்லுநர் மற்றும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஊழியர் என்றவகையில், 1890ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்போது எளிமை யான கூட்டல் மற்றும் வகைப்படுத் துதலுக்கு மின் எந்திரவியல் கருவி கள் மூலம் துளையிடப்பட்ட அட்டைகளைப் பயன்படுத்தும் முறையைப் பரிந்துரைத்தார். அவ ருடைய துளையிடப்பட்ட அட்டை கணக்கிடு கருவியை உற்பத்தி செய்ய அவர் அமைத்த நிறுவனம் ஐ.பி.எம். கார்ப்பரேஷன் நிறுவனத்தின் முன்னோடி ஆனது.