பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/706

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

update

704

User


 update:புதுப்பி; நிகழ்நிலைப்படுத்து: திருத்து; புதுநிலை : தகவல்களை மாற்றியோ அல்லது நீக்கியோ தகவல் கோப்புகளை நடப்பில் உள்ளதாக ஆக்கல்.

upgrade : மேம்படுத்து : ஒரு கணினி அமைப்பு போன்றவற்றின் கணிப்புத் திறனை அதிகரிக்க அதை மாற்றி அமைப்பது.

uplink :மேலிணை :தரைநிலையத் திலிருந்து செயற்கைக்கோளுக்கான தகவல் தொடர்பு வழித்தடம்.

upload :மேலேற்று:ஒரு பயன்படுத்துபவரின் அமைப்பில் இருந்து தொலைவில் உள்ள கணினி அமைப்புக்குத் தகவல்களை மாற்றுவது.

upper case : பெரிய எழுத்து: தலைப் பெழுத்துகள் எல்லா ஒளிக்காட்சி முகப்புகளிலும் அதைப் பயன்படுத்தும் திறன் இருக்கும்.

upper memory area : நினைவக மேற்பகுதி : வழக்கமான நினைவகமான 640 கே.வுக்கு அருகில் உள்ள 384.கே. முகவரியிடம் இதை மொத்த நினைவகத்தின் ஒரு பகுதியாகக் கொள்வதில்லை. ஏனென்றால், இப் பகுதி பயன்பாடுகள் தங்களது தக வலை சேமிக்க முடியாது. இப்பகுதி காட்சித்திரை போன்ற கணினியின் வன்பொருளுக்காக ஒதுக்கி வைக்கப் பட்டுள்ளது. 386இன் மேம்பட்ட முறையில் விண்டோஸ் இப்பகுதியில் பயன்படுத்தப்படாத இடங்களை அணுக முடியும்.

uppermemory block(UMB): நினைவக மேல்கட்டம்(யுஎம்பி): 80386அல்லது சிறந்த அமைப்பின் கீழ் இருக்கும் 1 மீமிகு எட்டியலுக்கும் 640 கிலோ எட்டியலுக்கும் இடையில் உள்ள நினைவகக் கட்டம். சாதன இயக்கி களும் டிஎஸ்ஆர்-களும் யுஎம்பி-யில் ஏற்றப்படலாம். ஏனென்றால், பயன்பாடுகளுக்குத் தேவையான வழக்கமான நினைவகத்தில் அதிக இடம் விட்டுவிட்டு அடிப்படை நினைவகத்தின் மதிப்பு மிக்க இடத்தினை இவை எடுத்துக் கொள்ளாமல் இருக்க இது உதவும்.

uptime : மேல்நேரம் : நிற்காமல் ஒரு கருவி எவ்வளவு நேரம் வேலை செய்கிறது என்பதைக் குறிப்பிடும் கால அளவு.

upward compatible : மேல் நோக்கிய ஏற்புடைமை ; இதற்கு முந்தைய மாதிரிகள் செய்யக்கூடிய அனைத் தையும் மேலும் கூடுதல் பணிகளைச் செய்யக்கூடிய கணினி அமைப்பு அல்லது வெளிப்புறச் சாதனம் என் பதைக் குறிப்பிடும் சொல்தொடர்.

usability:பயன்படுத்தக்கூடியதன்மை: ஒரு கணினி அமைப்பைப் பயன் படுத்துபவர் அதன் தகுதி பற்றி மதிப்பீடு செய்தல்.

use : பயன் : தகவல்களை அணுகு வதற்கு தகவல் தளங்களைத் திறக்க டிபேஸ் III பிளஸ் மற்றும் ஃபாக்ஸ் பேஸ் போன்ற மொழிகளில் பயன் படுத்தப்படும் ஒரு கட்டளை. திறந்த தகவல, பயனபாடடில உளளதாகக கருதப்படும்.

user : பயனாளர் : 1. சிக்கல் தீர்த்தல் அல்லது தகவல் கையாளலுக்கு கணினியைப் பயன்படுத்துபவர் அல்லது சொந்தமாக வைத்திருப்பவர். 2. கணினி அமைப்பின் பணிகள் தேவைப்படுபவர்.

user-defined function : பயனாளர் வரையறுக்கும் பணி ; பயனாளர் வரையறைச் சார்பலன் : முன்வரை யறை பணியைச் செய்வதற்கான ஆணைத்தொடரின் பகுதி அல்லது