பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/713

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

vertical red

711

video



vertical redundancy check: செங்குத்தான தேவையற்றவை சோதனை: தகவல் தொடர்பு களில் உள்ள பிழை நீக்கும் நுட்பம். இதில் ஒரு தகவல் கட்டத்தில் உள்ள ஒவ்வொரு துண்மி களின் வரிசையிலும் சோதனை கூடுதல் எழுத்து சேர்க்கப்படும். VRC என்றும் அழைக்கப்படும்.

vertical resolution : செங்குத்து பிரி திறன் : கோடுகளின் எண் (மேட்ரிச் சில் உள்ள வரிசை).

vertical scan frequency : செங்குத்து வருடி (நுண்ணாய்வு) அலைவெண்: ஒரு நொடியில் முழு காட்சித் திரையும் எத்தனை தடவைகள் புதுப்பிக் கப்பட்டு அல்லது மாற்றி வரையப் படுகிறது என்பது. ஹெர்ட்ஸ் முறையில் அளக்கப் படுகிறது. காட்சி அமைப்புகள் 45 முதல்200 ஹெர்ட்ஸ் வரையில் உள்ளன. சான்றாக அமெரிக்காவில் வி.ஜி.ஏ. என்பது 56 முதல் 60 ஹெர்ட்ஸ். ஐரோப்பாவில் 70 ஹெர்ட்சுக்கும் மேலே. டி.வி. யானது ஒரு நொடிக்கு 60அரைபடங் களாக புதுப்பிக்கப்படுகிறது. இவை ஒன்று கலந்து 30 முழுப்படம்/ நொடிக்கு வருகிறது.

vertical scan rate : செங்குத்து வருடி விகிதம்: ஒரு நொடியில் சிஆர்டி மின் னணு ஒளிக்கற்றையானது எத்தனை முறை சிஆர்டி திரையை முழுமையாக நிரப்புகிறது என்பது. காண முடியாத, மறுக்கத்தக்க மின் வீச்சு களைத் தவிர்க்க வேண்டுமானால் இது 50 ஹெர்ட்சுகளை விட அதிக மாக இருக்க வேண்டும்.

vertical scrolling : செங்குத்துச் சுருளாக்கம் : ஒரு பக்கத்தின் வழியே தகவல்களை மேலும் கீழும் நகர்த்து வதற்கான அல்லது ஒளிப்பேழைத் திரையில் காட்டுவதற்கான ஒரு பொறியமைவின் திறன்.

very high speed integrated circuit programme: அதிவேக ஒருங்கிணை; மின்சுற்று செயல்முறை.

very large scale integration (VLSI) : மிகப்பேரளவுஒருங்கிணைப்பு: மிகப் பெருமளவு (1000 முதல் 10,00,000 வரை) அமைப்பிகளை ஒரே சிப்பு வில் வைப்பதற்கான செய்முறை. பார்க்க : நான்காம் தலைமுறைக் கணினி, சிற்றளவு ஒருங்கிணைப்பு; நடுத்தர அளவு ஒருங்கிணைப்பு; பேரளவு ஒருங்கிணைப்பு; மீமிகைப் பேரளவு ஒருங்கிணைப்பு.

vesícular film : வெசிக்குலர் ஃபில்ம்.

vetting : செப்பமாக்கல், தணிக்கை செய்தல் : பாதுகாப்பு அபாயங்களைக் குறைப்பதற்காக ஓர் ஆளின் பின்னணி பற்றி ஆராய்ந்தறியும் செய் முறை.

VHSIC-programme : விஎச்எஸ்ஐசி செயல்முறை : அதிவேக ஒருங்கிணைப்பு மின் சுற்றுவழிச் செயல் முறை. இது அரசு-தனியார் தொழில் கூட்டு முயற்சி. எதிர்கால ஆயுதங் களுக்கும் சாதனங்களுக்கும் பயன்படுத்த முற்போக்கான ஒருங் கிணைந்த மின் சுற்றுவழிகளை இராணுவத்துறைக்கு வழங்குவது இதன் நோக்கம்.

VLDB : விஎல்டிபி : மிகப் பெரிய தகவல் தளம் என்று பொருள்படும் "Very Large DataBase" என்பதன் தலைப்பெழுத்துச் சொல். இது பன்முகக் கணினிகளிடையே பல்வேறு தகவல்தளநிருவாகப் பொறியமைவு களுடன் பகிர்ந்தளிக்கப்படும் ஒரு தகவல் தளம்.

video : ஒளிக்காட்சி, ஒளித்தோற்றம்; நிகழ்படம், ஒளி வடிவம் : குறிப்பாக ஒளிப் பேழைக் காட்சி முனையத்திலுள்ள காட்சி.