பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/719

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

voice com

717

voice pro


 மான இயக்கிகளைவிட இது அதிகம் செலவாகக் கூடியது. ஒலிபெருக்கியில் உள்ளதைப் போன்ற தொழில்நுட்பமே இதிலும் பயன்படுத்தப்படுகிறது. கொடுக்கும் சமிக்ஞையின் சக்தியைப் பொறுத்து, அந்த சுருளை ஒரு குறிப்பிட்ட தூரம் நகர்ந்து தேவைப்படும் தகவல் சேமிப்பு வழித்தடத்தின் மேல் சரியாக நிற்கும்.

voice communications: குரல் செய்தித் தொடர்பு; பேச்சுத் தொடர்பு : மனிதரின் கேள்வி வீச்செல்லைக்குள் ஒலியை அனுப்புதல். குரல் அல்லது ஒலியை ஒரு ஒத்த சொல் அல்லது இலக்கச் சைகைகளாக அனுப்பலாம்.

voice frequencies : குரல் அலை வரிசைகள்: நாம் பேசும்போது, நமது குரல் நாண்கள் அதிர்ந்து ஓசையை உருவாக்கி ஒரே அளவில் வாய்க்கும், தொண்டைக்கும் மூக்குக்கும் தொண்டைக்குழி வழியாகப் போய்ச் சேர்கிறது. இதில் ஏற்படும் ஒலிகள் பேச விரும்பும் ஒலியின் தன்மை களுக்கேற்ப ஒலி அலைகளை ஏற்படுத்து கின்றன. உயிரெழுத்துகளை ஒலிக்க அதிக சக்தி தேவைப்படுகிறது. மெய்யெழுத்துகளுக்கு உதடு கள், நாக்கு, பற்கள் செயல்படுவதால் குறைந்த சக்தியே போதுமானது என்பதுடன் அதிக அதிர்வுகளும் ஏற்படுத்துகின்றன. இதன் அலை வரிசைகள் 100 முதல் 2,000 ஹெர்ட்சு களாகும். குரலின் தொனியானது குரல் நாண்களின் அடிப்படை அலை வரிசைகளைப் பொறுத்தது. இது பெண்களுக்கு 200 முதல் 1,000 ஹெர்ட்சுகளா கவும், ஆண்களுக்கு 100 முதல் 500 ஆகவும் இருக்கும்.

voice grade : குரல்தரம்: வழக்கமான தொலைக்காட்சி இணைப்புகளில் பயன்படுத்தப் படும் கம்பிகளை கணினி இணைப்புகளுக்குப் பயன் படுத்துதல். பெரும்பாலான தொலைத் தொடர்புகளுக்கு இது இன்றியமையாதது. இது 300 முதல் 3,000 வரையிலான அலை வரிசை களில் தகவல்களை 9,600 இணைப்புகளில் அனுப்ப அனுமதிக்கிறது. இது, அகல் இணைப்பு, குறு இணைப்பு என்பவற்றிலிருந்து வேறுபட்டது.

voice input : குரல் உட்பாடு; குரல் உள்ளீடு; பேச்சாணை குரலாணை : ஒரு கணினியில் மனிதக் குரலை உட்பாடாகப் பயன்படுத்த அனுமதிக்கும் உட்பாட்டுச் சாதனம்.

voice mail : குரல் அஞ்சல்:பேச்சு அஞ்சல் : தொலைபேசியில் பேசப் படும் செய்திகள், இலக்க வடிவில் மாற்றப்பட்டு, கணினியின் நினை வகத்தில் சேமித்து வைக்கப்படுகின்றன. செய்திகள் வரவழைக்கப் படும்போது, அவை மீண்டும் குரல் வடிவுக்கு மாற்றப்படும்.

voice messaging : குரல் செய்தியளித்தல்: மின்னணு அஞ்சலுக்கு மாற்றாக குரல் அஞ்சலைப் பயன்படுத்தல். பெறுபவர் இல்லை என்பதற்காக அல்லாமல் குரல் செய்திகள் வேண்டு மென்றே பதிவு செய்யப்படுகிறது.

voice output : குரல் வெளிப்பாடு: கணினி, பேசும் மொழி மூலம் வெளிப்பாட்டினை வழங்க அனுமதிக்கிற ஒலி மறுமொழிச் சாதனம். இது கணினி சார்ந்த ஆணை, தன் சேவை எரிவாயு நிலையங்கள் போன்ற பல்வேறு பயன்பாடு களுக்கு உதவுகிறது.

voice processing : குரல் செயலாக்கம் : குரலைக் கணினி மூலம் கை