பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/720

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

voice rec

718

volume



யாளுதல். இதில் குரல் சேமிப்பும் அனுப்புதலும், குரல் பதிலளிப்பு, குரல் கண்டறிதல் மற்றும் சொற் பகுதி முதல் பேச்சுத் தொழில் நுட்பம்வரை காணப்படும்.

voice recognition : குரல் கண்டறிதல்: மனிதக் குரலைக் கண்டு கொள்ள கணினி வன்பொருள்/மென்பொரு ளுக்குத் திறனளிக்கும் ஒரளவு புதிய தொழில்நுட்பம். கணினியில் சேர்ப் பதற்கேற்ற மின்னணு வடிவில் பேசப்படும் தகவல்களை நேரடியாக மாற்றுதல்.

voice recognition system : குரல் காண் பொறியமைவு; குரலறி அமைப்பு பயன் பாட்டாளரின் குரலையும் சொற்களையும் அடையாளங்கண்டு புரிந்து கொள்ளக் கூடிய பொறியமைவு.

voice-grade channels : குரல்நிலை வழித்தடங்கள் : தொலைபேசி தகவல்தொடர்பு வசதியைப் பயன்படுத்தும் இடைப்பட்ட வேகம் கொண்ட ஒலிபரப்பு வழித்தடங்கள்.

voice recognition : குரல் ஆணை.

voice response : குரல் மறுமொழி: பேச்சு வடிவிலான கணினி வெளிப்பாடு.

voice synthesis : குரல் ஒருங்கிணைப்பு: கணினியின் நினைவகத்தில் சேமித்து வைக்கப்பட்டுள்ள ஒலித் தோரணிகளை, ஒலிபெருக்கி மூலம் ஒலிபரப்பக்கூடிய சொற் களாக ஒருங்கிணைக்கும் கணினி யின் திறம்பாடு.

volatile :அழியக்கூடிய, மறையக்கூடிய.

volatile file : விரைவுக் கோப்பு: மாற்ற மிகு கோப்பு : புதிய புதிய பதிவேடுகளைப் புகுத்துவதும், பழைய பதிவேடுகளை நீக்குவதும் அதிவேகத்தில் நடைபெறும் ஒரு கோப்பு. இதில் அணுகு நேரம் மாறக் கூடியது.

volatile memory : நிலையா நினைவகம், அழியும் நினைவகம்; மறையும் நினைவறை : கணினியின் அடிப்படை நினைவகம். மின்சாரம் நிறுத் தப்பட்டால் தன்னுடைய தகவல் களை எல்லாம் கணினி இழந்து விடும் என்பதை உணர்த்தும் சொல் என்பதால் இச்சொல் சரியாகவே அமைந்துள்ளது.

volatile storage : நிலையா சேமிப்பு; விரைவுச் சேமிப்பகம் : பொறியமை விலிருந்து மின்விசை நீக்கப்பட்டால் உள்ளடக்கங்களை இழந்துவிடக் கூடிய சேமிப்புச் சாதனம். இது விரைவற்ற சேமிப்பகம் என்பதிலிருந்து வேறுபட்டது.

volatility : விரைவுத்திறன்: ஒரு கோப்பு செய்முறைப்படுத்தப்படும் போது, பதிவேடுகள் சேர்க்கப் படுகிற அல்லது நீக்கப்படுகிற வேக வீதம். ஒரு தகவல் தளத்தை வடிவமைப்பதில் இது முக்கியமான நிலையளவுரு ஆகும்.

voltage : மின்னழுத்தம் : மின் விசை யின் அழுத்தம். ஒரு கணினி மின் சுற்றுவழியில் உள்ள உயர் மின்னழுத்தம் 1 என்பதாலும், குறைந்த மின்னழுத்தம் '0' என்பதாலும் குறிக்கப்படுகிறது.

volume : கன அளவு : ஒரு வட்டுத் தொகுதி, நெகிழ் வட்டு, நாடாச் சுருள் போன்ற சேமிப்புச்சாதனத்தின் இயற்பியல் அலகு.

volume lable : வட்டுப்பெயர்: ஒரு வட்டுக்கு அளிக்கப்படும் பெயர் (பொதுவாக விரும்பினால் மட்டும்).