பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/723

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

warm sta

721

WCCE



warm start :இதமான தொடக்கம் : உடன் தொடங்குதல் : இதமான உயிரூட்டம் என்பதும் இதுவும் ஒன்றே .

warm-up time : ஆயத்த நேரம்: ஒரு சாதனத்திற்கு விசையேற்றுவதற்கும், அதன் வெளிப்பாட்டு எழுத்தாக்கப் பயன்பாடு தொடங்குவதற்கு மிடையிலான இடைவேளை.

warnier- orrchart :வார்னியர்- ஆர் விளக்கப்படம் : பொதுவான செயலாக்கங் களை ஒரு புறத்திலும் (வழக்கமாக இடது புறத்தில்) மேலும் மேம்பட்ட தகவல்களை வலதுபுறத்திலும் காட்டும் விளக்கப் படம். வார்னியர்-ஆர்விளக்கப்படத் தினை 1970-களில் ஜீன் டொமினிக் வார்னியர் என்பவரும், கென் ஆர் என்பவரும் சேர்ந்து கண்டுபிடித்தார் கள். ஒரு குறிப்பிட்ட செயல்முறை அல்லது வகை வேறொன்றைச்சார்ந் திருப்பதைக் காட்டும் ஆணைத் தொடர் வடிவமைப்பில் இது பயன் படுத்தப்படுகிறது.

warnier-orr diagram : வார்னியர்-ஆர், வரைபடம்: அமைப்பு ஆய்வு மற்றும் வடிவமைப்புக்கு மென் பொருள் பொறியியல் துறையில் பயன்படுத்தப்படும் வரைகலை வரைபட தொழில்நுட்பம்.

wamingbox:எச்சரிக்கைபெட்டி: விண் டோஸ் ஆணைத்தொடரில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் பெட்டி வடிவிலான எச்சரிக்கை செய்தி.

warning message : எச்சரிக்கைச் செய்தி : கடுமையல்லாத ஒரு பிழை குறித்தப் பயன் பாட்டாளருக்கு எச்சரிக்கை விடுப்பதற்கு ஒரு தொகுப்பி மூலம் உருவாக்கப்படும் பிழை சுட்டும் செய்தி.

watch point : கவனப்பகுதி: பிழை நீக்குவதற்காக ஒரு ஆணைத் தொடரில் நுழைக்கப்படும் ஒரு நிலை. கவனப் பகுதிகள் ஒரு குறிப்பிட்ட நினைவகப் பகுதியின் உள்ளடக் கங்களைக் கட்டும்.

WATFOR : வாட்ஃபார் : கனடாவில் ஒன்டாரியோவிலுள்ள வாட்டர்லு பல்கலைக் கழகத்தில் உருவாக்கப்பட்ட FORTRAN-இன் பதிப்பு. 'வாட்ஃபிவ்' (watfiv) என்பது வாட் ஃபார் என்பதன் திருத்தப் பதிப்பு.

WATS : வாட்ஸ் : விரிபரப்பு தொலை பேசி எனப் பொருள்படும் "Wide Area Telephone" என்பதன் தலைப்பெழுத்துச் சுருக்கம்.

Watson, Thomas J. Jr. : வாட்சன் தாமஸ் ஜே (இளையவர்) : கணினித் தொழிலில் IBM கழகத்தை முன்னணி நிலைக்குக் கொண்டு வந்தவர்.

Watson, Thomas J. Sr (1874-1956) : வாட்சன், தாமஸ் ஜே (மூத்தவர் ; 1874-1956) : IBM கழகத்தின் வழி காட்டி. தலைசிறந்த விற்பனையா ளர். 1952 வரை IBM தலைவராக இருந்தவர். சிந்தனை செய்வதே இவரது குறிக்கோளாக இருந்தது. எனினும் இலக்கமுறைக் கணினி களுக்கு அதிகம் கிராக்கி இருக்கும் என்று இவர் கருதவில்லை.

wave : அலை : கதிரியக்க சக்தியின் வடிவம். அனைத்து வானொலி சமிக்ஞைகளும், ஒளிக்கதிர்கள், எக்ஸ்கதிர்கள் மற்றும் அண்டக் கதிர்களும் தொடர் அலைபோன்ற ஒரு சக்தி யைக் கதிரியக்கம் செய்கின்றன.

waveform ; அலைவடிவம்: ஒப்புமை (அனலாக்) வடிவில் ஒரு குறிப்பிட்ட ஒலி அலை அல்லது மின்னணு சமிக்ஞையின் அமைப்பு.

WCCE டபிள்யூசிசிஇ: கல்வியில் கணினிகள் பற்றிய உலக மாநாடு