பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/724

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

web

722

white



என்று பொருள்படும் 'Word Conference on Computers in Education' என்பதன் தலைப்பெழுத்துச் சுருக்கம்.

web press : வெப் அச்சகம் ; வலை அச்சகம் 'வெப்' எனப்படும் உருளையிலிருந்து காகிதத்தில் அச்சடிக்கும் அச்சகம்.

web server : வலைப் பணியகம்.

web site : வலைத் தளம்; வலை முகவரி.

weed : களை : ஒரு கோப்பிலிருந்து

விரும்பத்தகாத அல்லது தேவையற்ற இனங்களை அகற்றுதல்.

weighted code : எடைக் குறியீடு : துண்மியின் இடைநிலை ஓர் எடையிட்ட மதிப்பளவைக் கொண்டிருக்கிற குறியீடு. 8-4-2-1 என்ற எடையிட்ட குறியீட்டுப் பொறியமைவில் 329 என்ற பதின்ம எண், 0101 0010 1001 என்று எழுதப்படும்.

weitek coprocessor : வெய்டெக் கூட்டுச் செயலகம் : வெய்டெக் கார்ப்பரேஷன் உருவாக்கிய நுண் மற்றும் சிறு கணினிகளுக்கான அதிக திறன் மிக்க கணினி கூட்டுச் செயலகம், ஒரு நொடிக்கு எத்தனை வெட்ஸ் 1981-முதல் இந்நிறுவனம் கேட் மற்றும் வரைகலை பணி நிலையங்களுக்கான கூட்டுச் செயலகங்களை உருவாக்கி வருகிறது. இதனைப் பயன்படுத்த மென்பொருளும் இதன் மீதே எழுதப்பட்டிருக்க வேண்டும்.

well behaved: நன்னடத்தையுள்ள : ஒரு தர அமைப்பிலிருந்து விலகிச் செல்லாத ஆணைத்தொடரைக் குறிப்பிடுகிறது.

west coast computer fair : மேற்குக் கரைக் கணினிக் காட்சி : அமெரிக்காவில் சான்பிரான்சிஸ்கோவில் ஆண்டுதோறும் நடைபெறும் முக்கியமான நுண் கணினி வணிகக் கண்காட்சி.

Wetware : வெட்வேர்: உயிரியல் அமைப்பு அல்லது அதைப் போலச் செய்ய முயலும் ஒன்று.

Wetzel : வெட்ஜெல் : ஒரு எதிர்மின் கதிர்க்குழாயிலுள்ள உருக்காட்சியுடன் சேர்க்கப்படும் படக்கூறு.இது காட்சியின் தெளிவினை மேம்படுத்த உதவுகிறது.

What it? : விரிதாள் வினவல்:காரண விளைவு அலசல்;பெரும்பாலான மிண்னு விரிதாள் செயல்முறைகள் செயற்படுகிற வளாகம்.மற்ற மதிப்பளவுகளின் கூட்டு விளைவினை தீர்மானிக்க புதிய மதிப்பளவுகளைப் புதிதாக அமைக்கலாம்.

Wheel printer: சக்கர அச்சுப்பொறி : உருளை அச்சு;அச்சடிக்கும் எழுத்துகளை உலோகச்சக்கரங்களில் கொண்டிருக்கும் அச்சடிப்புச் செயல்முறை அமைந்துள்ள அச்சுப்பொறி.

Whetstones :வெட்ஸ்டோன்ஸ் : பதின்மப் புள்ளி கணக்கீடுகளைச் சோதிக்கும் பெஞ்ச்மார்க் ஆணைத்தொடர்.ஒரு நொடிக்கு எத்தனை வெட்ஸ்டோன்கள் என்ற அளவில் இதன் முடிவுகள் கூறப்படுகின்றன.வெட்ஸ்டோன் 1-32 துண்மி, வெட்ஸ்டோன் 11-64 துண்மி இயக்கங்களைச் சோதிக்கின்றன.

While loop : நிகழ்சுற்று.

White noise : வெள்ளை ஓசை; வெண்ணிரைச்சல்; அச்சுப்பொறிகள், விசைப்பலகைகள், காலடிகள் போன்ற அலுவலகச் சந்தடிகளின் இடைவெளிகளை நிரப்புவதற்காக கேட்கக்கூடிய எல்லா அலைவெண்களிலும் உண்டாக்கப்படும் தொடர் ஓசை.