பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/726

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

window

724

wired



வகை நிலைவட்டு. இது காற்றுப் புகாத கொள்கலத்தில் வைத்து முத்திரையிடப்பட்டிருக்கும்.

window : பலகணி; சாளரம் : ஒளிப் பேழைக் காட்சிப் பகுதியில் ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற் காகக் குறித்தமைக்கப்பட்டுள்ள ஒருபகுதி. திரையை பன்முகப்பலகணிகளாகப் பகுப்பதற்கு ஒரு தனிவகை மென் பொருள் அனுமதிக்கிறது. இந்தப் பலகணிகளை நகர்த்தலாம். பெரிதாகவோ சிறிதாகவோ ஆக்கலாம். இது பெரிய சொல் செய்முறைப் படுத்தும் ஆவணங்களுக்குப் பெரி தும் பயன்படுகிறது.

windowing : பலகணியாக்கம் ;சாளர மாக்கல் : திரையில் ஒரே சமயத்தில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கோப்புகளை அல்லது ஒரு கோப்பின் பகுதிகளைக் காட்டுதல்.

width table : அகலப்பட்டியல் : ஒரு அச்செழுத்துத் தொகுதியில் உள்ள ஒவ்வொரு எழுத்தின் குறுக்கு வாட்ட அளவுப் பட்டியல். சொல் செயலாக்க மற்றும் டி.டி.பி.ஆணைத் தொடர்களில் பயன்படுத்தப் படுகிறது.

winchester technology:வின்செஸ்டர் தொழில் நுட்பம்: கடின காந்த வட்டு சேமிப்பகங்களில் நிரந்தரமாக (அணுகு கரங்கள் மற்றும் படி/எழுது முனைகளுடன்) மூடப்பட்ட பாதுகாப்பான பெட்டிகளில் வைக்கப் படுபவைகளுக்குத் தரப்படும் பெயர். பல அளவுகளிலும், சேமிப்புத் திறன் களிலும் வின்செஸ்டர் வட்டு அமைப்புகள் வருகின்றன.

windows : சாளரம்;பலகணி.

windows environment : சாளரச் சூழ்நிலை : திரையில் பல்சாளரங்களை அளிக்கின்ற பயன்பாட்டு ஆணைத்தொடர் அல்லது விரிவாக்கம். டெஸ்க்வியூ, விண்டோஸ், பிஎம், மல்டி ஃபைன்டர், மற்றும் எக்ஸ் விண்டோ ஆகியவை இதற்குச் சான்றுகள். இப்போது செயலாக்க அமைப்பையே விண்டோஸ்’ என்ற சொல் குறிப்பிடுகிறது.

windows metafile : விண்டோஸ் மெட்டாஃபைல்: மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் நிறுவனம் பயன்படுத்தும் வரைகலைக் கோப்புப் படிவம். இதில் நெறிய (வெக்டார்) வரை கலை, பிட்மேப், சொற்பகுதி ஆகி யவை இடம்பெறும். சில சமயங் களில் மெட்டாஃபைல்களை தற்காலிக சேமிப்பகத்துக்கு பயன் படுத்துவார்கள். ஆனால், அதன் பயன்பாடுகள் பெரும்பாலும் மறுமுறை பயன்படுத்துவதற்காகச் சேமித்து வைக்கப் படுகின்றன.

Windows NT : விண்டோஸ் என்டி: மைக்ரோசாஃப்ட் கார்ப்ரேஷனின் பல்பணி வாடிக்கையாளர், சேவையாளர் இயக்கத் தொகுப்பு. 386 மற்றும் அதற்கு மேற்பட்டவை களுக்கான 32 துண்மி செயலாக்க அமைப்பு.

windows programme : விண்டோஸ் ஆணைத்தொடர் : இருக்கின்ற ஒரு இயக்கத் தொகுப்புக்கு விண்டோஸின் திறனைச் சேர்க்கின்ற மென் பொருள். விண்டோஸின் கீழே இயங்கு வதற்காக எழுதப்பட்ட பயன்பாட்டு ஆணைத்தொடர்.

wire board : கம்பிப்பலகை.

wired programme computer : கம்பிச் செயல்முறைக் கணினி:நிறைவேற்ற செயற்பாடுகள், கம்பி அமைப்பு மற்றும் கம்பி இணைப்புகள் மூலம் குறிப்பிடப்படுகிற ஆணைகளைக் கொண்டுள்ள கணினி. இந்தக்