பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/727

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

wirefra

725

Word



கம்பிகள், அகற்றக் கூடிய கட்டுப்பாட்டு தொடர் மூலம் பிணைக்கப் பட்டுள்ளன. இது செயற்பாட்டுக்கு ஒரு குறிப்பிட்ட அளவு நெகிழ் திறனை அளிக்கிறது.

wireframe modeling : கம்பிச்சட்ட மாதிரியமைப்பு: கேட்பயன்பாட்டில் முப்பரிமாணத்தைக் குறிப்பிடும் ஒரு நுட்பம். இதில் எல்லா கோடுகளும், எதிர்க்கோடுகளும் தெளிவாகக் காட்டப்படும். ஆனால், உட்புற உறுப்புகள் பார்வையிலிருந்து மறைக்கப்படும். மேற்பரப்பு மற்றும் திட மாதிரியமைப்பைவிட, கம்பிச் சட்ட மாதிரியமைப்பு முப்பரிமாண உருவங்களுக்கு எளிதானது.

wireless : கம்பியிலா.

wireless telephone : கம்பியிலா தொலைபேசி.

wire wrap . கம்பிப் பொதிவு ; கம்பிச் சுற்றமைவு : மின்சுற்றுவழிப் பலகை உருவாக்குவதில் ஒருவகை. இதில் மின் இணைப்புகள், உரிய உறுப்புகளின் இணைப்பு முனைகளுக்கு இணையான கம்பங்களுடன் இணைக்கப்பட்ட கம்பிகள் வழியாக ஏற்படுத்தப்படுகின்றன.

Wirth, Niklaus : விர்த், நிக்காளஸ் : சுவிட்சர்லாந்தில் 1968 இல் பிளைஸ் பாஸ்கல் பெயரால் பாஸ்கல்' என்ற கணினி மொழியை உருவாக்கியவர். இது பிரபலமான உயர்நிலைச் செயல்முறைப்படுத்தும் மொழியாகும். இது, கட்டமைவுச் செயல் முறைப்படுத்தும் உத்திகளைக் கையாள உதவுகிறது.

wizard : வித்தகர் : மைக்ரோசாஃப்ட்.

word:சொல்:தகவல், துண்மிகளின், எழுத்துகளின் அல்லது எட்டியல்களின் தருக்க முறை அலகு. இது ஒரு தனி அலகாகக் கருதப்படுகிறது. இதனை ஒரே சேமிப்பு அமை விடத்தில் சேமித்துவைக்கலாம்.

word addressabie : சொல் முகவரியிடக் கூடிய: சொல் எல்லைகளுக்கு மட்டும் நினைவகத்திற்கு முகவரியிடும் கணினி.

word coordinates : சொல் ஒருங்கிணைப்புகள் : எக்ஸ் மற்றும் ஒய் ஒருங்கிணைப்பு வரிசையைக் குறிப்பிடும் மென்பொருளால் அமைக்கப்பட்ட திரை ஒருங்கிணைப்பு அமைப்பு. இதில் எதிர்மறை எண்கள் இருக்கலாம் அல்லது இல்லாமல் போகலாம். சான்று, -100மற்றும் +100 -க்கு இடது, வலது மதிப்புகள். இந்த ஒருங் கிணைப்புகளை திரையின் உருவ ஒருங்கிணைப்பு அமைப் புடன் அமைக்கப்படும். அதன்படி மேல் இடது மூலை எப்போதும் x=0 மற்றும் y=0 என்றே குறிப்பிடப் படும். இதில் உடன்பாட்டு எண்களே பயன்படுத்தப்படுகின்றது.

word.length: சொல்நீட்சி;சொல்நீளம்: ஒரு சொல்லிலுள்ள துண்மிகளின் எண்ணிக்கை. பொதுவாக, இது 4,8, 16 அல்லது 32 என்ற எண்ணிக்கை களில் இருக்கும்.

word processing: WP :சொல் செய்முறைப் படுத்துதல்; சொல் தொகுப்பு ஆணைத்தொடர் : ஒரு மின்னணு விசைப் பலகை, கணினி, அச்சுப் பொறி ஆகியவற்றைப் பயன்படுத்தி, மின்னணு முறையில் வாசகங்களைச் சேமிப்பதற்கும், எழுதுவதற்கும், கையாள்வதற்கு மான உத்தி. வாசகம் பொதுவாக நெகிழ் வட்டு போன்ற ஒரு காந்தச் சாதனத்தில் பதிவு செய் யப்படுகிறது. இறுதி வெளிப்பாடு காகிதத்தில் பதிவாகிறது.