பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

B 77 backgro

B : பி : 'பைட்' (byte) அல்லது பாட்' (baud) என்பதன் சுருக்கப் பெயர். இருப்பகத்தைக் குறிப்பிடும் இடங் களில் பைட் (எட்டியல்) என்றும் தகவல் தொடர்புகளில் குறிப்பிடும் போது 'பாட்' (செய்தி வேகம்) என் றும் உணர்த்தும் கேபி (KB) - 1000 எட்டியல்கள் அல்லது பாட் (தொழில் நுட்ப அடிப்படையின்படி 1கே (1K) என்பது 1024 எட்டியல்களைக் குறிக்கும்).

Babbage, Charles : பாபேஜ், சார்லஸ் : (1792 - 1871) ஆங்கிலேய கணிதவிய லாளர் - கண்டுபிடிப்பாளர். 20 பதின்மப் புள்ளிகள் வரை மடக்கை எண் (லாகர்தம்) மூலம் கணக்கிடக் கூடிய ஒரு வேறுபாட்டு எந்திரத்தை வடி வமைத்தவர். இலக்கமுறை கணிப் பொறிக்கு முன்னோடியாக விளங் கும் 'பகுப்பு எந்திரத்தையும் உரு வாக்கியவர். பாபேஜ் காலத்தில் அவரது எந்திரங்களை வெற்றிகர மாக உருவாக்குவதற்கு வேண்டிய பொறியியல் தொழில் நுட்பங்கள் முன்னேறியவையாக இல்லை.

babble : பிறழ்வு : ஒரு அமைப்பின் பெருமளவு வழித்தடங்களில் ஏற் படும் குறுக்கீட்டுப் பேச்சு.

backdrop : பின்னணி : பின்னணித் தோற்றம். சிடி-ஐ-யில் மற்ற தோற்ற ங்கள் தெளிவாகத் தெரியும் போது பின்னணி தோற்றப் பகுதியும் முழு வதும் தெரியும்.

back-end case : பின்முனை எழுத்து : ஆணைத் தொடர் குறியீடுகளை உரு வாக்கும் எழுத்துக் கருவிகள்.

back end processor : பின்னணிச் செயலகம்: தகவல் தள எந்திரம் (Data base machine) போன்றது. பெரிய செயலகத்திற்கும் நேரடி - அணுகு சேமிப்புச் சாதனங்களில் சேமித்து வைக்கப்பட்டுள்ள தகவல் தளங் களுக்கும் இடைமுகமாகப் பணியாற் றும் கணினி.

backfilling :பின்புற நிரப்புதல் : 8086/ 88 மற்றும் 286 பி.சிக்களின் வழக்க மான நினைவகத்திற்குப் பதிலாக இஎம்எஸ் நினைவகத்தை ஒதுக்கு வது. மூல தாய்ப்பலகை அட்டை சிப்புகள் செயலிழக்கின்றன. இஎம் எஸ் சிப்புகளுக்குக் கீழ் நினைவு முகவரிகள் இடப்படு கின்றன. பின்புற நிரப்புதலின் மூலம் டெஸ்க்வியூ போன்ற பல்பணி ஆணைத் தொடர்கள் இயங்கவும், விரிவாக்கப்பட்ட நினைவகத்தில் ஒரே நேரத்தில் கூடுதல் ஆணைத் தொடர்களை அமைக்கவும் முடியும்.

background :பின்புலம்; பின்னணி : 1. பன்முகக்கட்டளையிடலில் குறைந்த முன்னுரிமையுள்ள ஆணைத் தொடர் செயல்படுத்தும் சூழல். 2. காட்சித் திரையில் காட்டப்பட உருக்களோ வரைபட முன்புலங்களோ இல்லாத திரைப்பகுதி.

background colour : பின்னணிவண்ணம்; பின்புல நிறம் : காட்சித் திரையின் பின்னணி நிறம். காட்சித் திரையை காலி செய்த பிறகு இந்த நிறத்துக்குத் திரை திரும்பும்.

background ink : பின்புலமை : அதிகம் பிரதிபலிக்கும் மை, ஸ்கே னர் கண்டுபிடிக்க முடியாத வகை யில் படிவத்தின் பகுதிகளை இது அச்சிடும்.

background job : பின்னணிப்பணி.

background noise : பின்னணி இரைச்சல் : கம்பியிலோ, வழித்தடத்திலோ அல்லது மின்சுற்றிலோ வந்து சேரும் தொடர்பில்லாத, தேவையற்ற சமிக்ஞைகள்.