பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Backus Nor 80 bandwidth

யாற்றிய இவர், கணித, அறிவியல் மற்றும் பொறியியல் கணக்கீடுகளில் ஃபோர்ட்ரான் (Fortran) என்னும் ஒரு உயர்நிலைக் கணினி மொழியை உருவாக்கினார்.

Backus Normal Form (BNF): பேக்கஸ் வழமை வடிவம் (பிஎன்எஃப்) : ஆணைத் தொடர் மொழிகளின் தொடரமைப்பை விளக்குவதற்கான குறியீடு.

backward - chaining : பின்னோக்கி சங்கிலியிடல்: தேவைப்படும் இலக்கி லிருந்து ஏற்கனவே தெரிந்த உண்மை களை நோக்கிச் செல்லும் இலக்கு நோக்கிய காரண முறை.

backward compatible: பின்னோக்கி தகவமைவு: கீழ்நோக்கிய தகவமைவு போன்றது.

backward read : பின்புறமாகப் படி : சில காந்த நாடா அமைப்புகளில் உள்ள வசதி. இதில் காந்த நாடா அலகுகள் தலைகீழாக நகர்ந்து கொண்டே, கணினி பின் இருப்பகத் திற்குள் தகவல்களை மாற்றித் தரும்.

badge reader : பட்டை படிப்பொறி : கடன் அட்டைகள் அல்லது சிறப்புக் குறியீட்டுப் பட்டைகளைப் படிக்கக் கூடிய முனையம்.

bad sector : குறையுடை பகுதி : வட்டில் உள்ள குறை காரணமாக சரி யாகப் படிக்கவோ அல்லது எழு தவோ முடியாத வட்டின் ஒரு பகுதி.

BAK : பாக் : வேர்ட்ஸ்டார் சொல் செயலாக்க ஆணைத் தொடரில் கோப்பு உருவாக்கும் பழைய பதிப் பின் கோப்பு பெயர் நீட்டம்.

Baldwin, Frank Stepher : பால்ட்வின், ஃப்ராங்க் ஸ்டீஃபன் : பின்னோக்கி வரக்கூடிய நான்கு செயல்முறை களையுடைய முதல் கணிப்பியை இவர் 1875இல் அமெரிக்காவில் கண்டுபிடித்தார்.

ball printer : பந்து அச்சுப்பொறி : மீண்டும் மாற்றக்கூடிய பந்து வடிவ அச்சு முனை உள்ள அச்சுப்பொறி. அச்சுப்பந்தினை மாற்றுவதன் மூலம் அச்சு எழுத்துகளை மாற்ற முடியும்.

ballistic gain : செலுத்து வினை ஆதாயம் : உருள் பந்து அல்லது சுட்டுப் பொறிதன்மை. கை வேகத்தை ஒட்டி சுட்டுக்குறி பயணம் செய்யும். பந்து வேகமாக ஓடினால், அடையாள அம் பும் அதைவிட அதிக தூரம் நகரும்.

balloon help : பலூன் உதவி : குறிப் பிட்ட பொருளின் மீது அடையாள அம்புவாகிய சுட்டுவான் தோன்றி னால், கார்ட்டூன் பாணியில் திரை யில் காட்டப்படும் உரையாடல் பெட்டி. மெக்கின்டோஷில் சிறப் பாகப் பயன்படுத்தப்படுகிறது.

band : பட்டை : தொலைத் தகவல் தொடர்பில் தொடர்ச்சியான அலை வரிசைகள், பட்டை அச்சுப் பொறி யால் அச்சிடும் சாதனம்.

band pass filter: அலைக்கற்றை அனுப்பும் வடிகட்டி : மின்னணுச் சாதனம் அதன் வழியாக ஒரு குறிப் பிட்ட அலை வரிசையை மட்டும் செல்ல அனுமதித்து மற்றவற்றைத் தடுக்கும்.

band printer : வரிப்பட்டை அச்சுப் பொறி : எழுத்துகளின் தொகுதியை எடுத்துச் செல்வதற்கு இரும்பு வரிப் பட்டை அல்லது பாலியுரேத்தேன் பெல்ட்டைப் பயன்படுத்துகின்ற அழுத்தும் அச்சுச் சாதனம். ஒரு நிமிடத்திற்கு 30 முதல் 2,000 வரிகள் வரையிலான வேகத்தில் அச்சிடு வதுடன் பல கார்பன் பிரதிகளையும் இதனால் தரமுடியும்.

bandwidth : அலைக்கற்றை அகலம் : செய்தித் தகவல் தொடர்புகளில்