bank 81 bar pri
அதிக அலைவரிசைக்கும், குறைந்த அலை வரிசைக்கும் உள்ள வேறு பாடு. ஒரு நிமிடத்திற்கு இத்தனை துண்மிகள் அல்லது பாட்கள் (bauds) என்ற அளவை முறையில் ஒரு தகவல் தொடர்பு வழித்தடத்தைக் குறிப்பிடுவது.
bank : வங்கி : 1. தகவல் தொடர்பு களில், இரண்டு குறிப்பிட்ட எல்லை களுக்கிடையிலான அலைவரிசை களின் பரப்பு. 2. செயல்பாட்டின் பரப்பு அல்லது தன்மை . 3. வட்டு அல்லது உருளை போன்ற இருமுக சாதனத்தில் வட்டமான பதிவு செய் யும் வழித்தடங்களின் தொகுதி.
banked memory: சேமிக்கப்பட்ட நினை வகம் : வழக்கமான 64கே ராம் நினை வகத்தை அதிகப்படுத்தும் முறை. முகவரியிடலில் ஏற்படும் குழப் பத்தைத் தவிர்க்க துண்மி நுண் செய லகங்களில் இருந்து மேலும் பெரிய அளவுள்ளவற்றுக்கு பொதுவாக 1 மீமிகு எட்டியல் உள்ளவற்றுக்கு முகவரியிடுவது. 64கே - வுக்கு மேல் உள்ள அட்டைகளை தேவைப்படும் போது மட்டும் மென்பொருள் கட்டுப் பாட்டின் மூலம் துவங்கப்படும்.
banking software : வங்கியியல் கணினிச்செயல்முறை.
banking through telephone : வங்கி தொலைபேசி வழி வங்கிச் செயல்பாடு.
bank switching : வங்கி மாற்றம் : மின்னணு மின்சுற்றுகளை ஏற்படுத்துதல், நிறுத்துதல். மற்ற அலகுகள் நிறுத்தப் படும்போது ஒன்று மட்டும் செயல் படும். தேவையுள்ள முறையில் எல்லா மின்சுற்றுகளையும் முகவரி யிடுவதையோ; இயக்கப்படுவதை யோ தடுக்கும் கணினி அமைப்பின் வடிவமைப்பு.
barchart : பட்டைவரைபடம் : வணிக வரைபடத் தொகுப்புகளில் பரவ லாகப் பயன்படும் வரைபடம். கால அட்டவணையைக் காட்டுவதற்குப் பயன்படுவது.
barcode : பட்டைக் குறியீடு; பட்டைக் கோடு; பட்டை வரி : வருடியினால் படிப்பதற்காக ஒட்டுச் சீட்டில் பயன் படுத்தப்படும் குறியீடு. சில்லறை விற்பனைப் பொருள்களை அடை யாளம் காண பட்டைக் குறியீடுகள் பயன்படுகின்றன. நூல் நிலையங் களில் உள்ள புத்தகங்களையும் இரயில் வண்டி பெட்டிகளிலும் இது பயன்படுத்தப்படுகிறது.
bar-code reader : பட்டைக் குறியீடு படிப்புப் பொறி; பட்டைக் கோடு படிப்பான்; பட்டை படிப்பான்; பட்டைக்குறி யீட்டுப் படிப்பான் : பிரதிபலிக்கும் ஒளியின் மூலம் பட்டைக் குறியீடு களைப் படிக்கும் ஒரு ஒளிப்பட மின் சக்தி வருடி.
bar-code scanner: பட்டைக் குறியீடு வருடி : இணையான பட்டைகளின் வடிவத்தில் பதிவு செய்யப்பட்ட எழுத்துகளைக் கொண்ட பொருள் களின் தகவலைப் படிக்கக்கூடிய ஒளிச் சாதனம். இருப்பு வைப்பதற் காகவோ அல்லது செயலாக்கத்திற் காகவோ எழுத்துகள் இலக்க சமிக் ஞைகளாக மாற்றப்படுகின்றன.
bar code wand : பட்டைக்குறியீட்டுக் கோடு.
bare board: வெற்று அட்டை வெறும் பலகை : எந்த ஒரு மின்னணுச் சாதன மும் இல்லாத அச்சிட்ட மின்சுற்று அட்டை .
bar printer: அட்டை அச்சகம் : வரியின் குறுக்கே அடுத்தடுத்து நிற்க வைக்கப் பட்ட பல பட்டைகளைப் பயன் படுத்தி அழுத்தி அச்சிடும் சாதனம்.