பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

black box 95 block

சமிக்ஞைகளை மாற்றுகின்ற ஒரு மின்னணு அல்லது எந்திர சாதனம். ஆனால், இதன் உள்ளே எவ்வாறு செயல்படுகிறது என்பது அதைப் பயன்படுத்துகின்றவருக்குப் பெரும் பாலும் மர்மமாகவே இருக்கும்.

black box approach: கறுப்புப் பெட்டி அணுகுமுறை : ஒரு கணினி அமைப் பின் தகவல் மாற்றும் செயல்முறை பற்றிய தொழில் நுட்ப தகவல்களை ஆராய்வதற்குப் பதிலாக, எல்லை கள், இடைமுகங்கள், உள்ளீடுகள் மற்றும் வெளியீடுகளைப்பற்றி ஆராய்வது.

blackout : இருட்டடிப்பு : மின்சக்தி ஓட்டம் நின்றுபோதல்.

blank : காலியிடம் ; வெற்றிடம் : 1. எழுத்து எதுவும் பதியப்படாத, ஆவணத்தின் ஒரு பகுதி. 2. மின்னணு விரிதாளில் ஒரு அறை அல்லது அறை வரிசைகளில் உள்ளவற்றை அழிக்கக் கூடிய ஒருகட்டளை. 3. ஒரு எழுத்துத் தகவல் சேர்க்கக்கூடிய காலி இடம்.

blank character : வெற்றிட எழுத்து : 1. வெளியீட்டுச் சாதனத்தில் ஒரு எழுத்து இடவெளியை உருவாக்கக் கூடிய ஒரு குறியீடு. 2. பொதுவாக b என்று இதைக் குறிப்பிடுவார்கள்.

blanking : வெற்றிடமாக்கல் : காட்சித் திரையில் ஒரு எழுத்து இருந்த போதிலும், அந்த இடத்தை வெற்றிடமாக ஆக்கி அந்த எழுத்தை இடாம - லிருத்தல்.

blank squash : வெற்றிட நீக்கம் : தகவல் பொருள்களுக்கிடையில் வெற்றிடங்களை நீக்குதல். சான்றாக, City + , " + STATE என்று Austin TX என்று வருவதைவிட AUSTIN, TX என்று வந்து வெற்றிடம் நீக்கப் பட்டிருக்கும்.

bleed : சொட்டுதல் : டிடிபி மற்றும் வணிக அச்சில் பயன்படுத்தப்படும் சொல். பக்கத்தின் இறுதிப் பகுதியில் இருந்து வெளியே போவதைக் குறிப் பிடுகிறது.

blindsearch : கண்மூடித்தேடல் : ஒரு முறையான திட்டமின்றித் தேடல். அதிக நேரம் எடுக்கும் தேடல். இதில் எல்லா வாய்ப்புகளும் முயற்சிக்கப் படும். ஆனால் புத்திசாலித்தனம் இருக்காது.

blinking : இமைத்தல் : வடிவமைப் பவரின் கவனத்தைக் கவர திரையில் தோன்றித் தோன்றி மறையும் ஒரு வரைபடத் தோற்றம்.

blip : திரைத் தோற்றம் : ஒளிக்காட்சி திரையில் உள்ள ஒரு சிறிய பிரகாச மான தோற்றம். பொதுவாக இது ஒரு ரேடார் திரையாக இருக்கும்.

blip mark : திரைத் தோற்றக் குறியீடு : நுண் திரைப்படம் போன்ற ஒரு ஊட கத்தில் காணப்படும் கோடு அல்லது புள்ளி. இதை ஒளி முறையில் கண்ட றிய முடியும். நேரம் அறிய அல்லது எண்ணுவதற்குப் பயன்படுத்தப் படும்.

block: தொகுதி; இணைப்பு: தொகுப்பு; ஒருங்கிணைப்பு; தொகுப்புத்தொகை : 1. உள்ளீடு / வெளியீடு சாதனத்தில் ஒரே அலகாகக் கருதப்படும் எழுத்து கள், இலக்கங்கள் அல்லது சொற் களின் தொகுதி. எடுத்துக்காட்டாக, ஒரு காந்தவட்டில் இரண்டு இடைப் பட்ட கட்டத்தின் இடைவெளிக்கு இடையில் பதிவு செய்யப்பட்ட தகவல்களைக் கூறலாம். 2. ஒரு தனி பதிவேடாகக் கருதப்படும் ஒரு பதிவேட்டின் தொகுதி.

block compaction : கட்டம் அமைத்தல் : நினைவகம் அமைத்தலில் ஒரு செயல்முறை.