பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1010

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

1009


nonimpact print

1009

nonmaskable interrupt

படும்போது அச்சடிக்கத்தக்க எழுத்து உருக்காட்சியை உண்டாக்காத எழுத்து. எடுத்துக்காட்டு : சகடக் கட்டுப்பாடு; தலைப்பெழுத்து.

nonimpact print : தொடாஅச்சு : தாக்குறவிலா அச்சு.

nonimpact -printer : தாக்குறவிலா அச்சடிப்பி : வெளிப்பாடுகளை அச்சடிப்பதற்காக மின் வெப்பம், லேசர் தொழில்நுட்பம், ஒளிப்பட உத்திகள் போன்றவற்றைப் பயன்படுத்தும் அச்சடிப்பி. இது தாக்குறவு அச்சடிப்பிலிருந்து வேறுபட்டது.

noninterfaced : இடைப் பின்னலற்ற : வரிகளை மேலிருந்து கீழாக வரிசையாகக் காட்டி ஒரு சிஆர்டி ஒளி தருதல். ஒரு திரையகத்தில் தானாகவே இடைப் பின்னல் உள்ளது இல்லாதது என்றாவதில்லை. இடைப் பின்னல் இல்லாத திரையகக் குறுக்குவாட்ட ஒளிக்காட்சி கட்டுப்படுத்தியிலிருந்து எடுத்துக்கையாளும் திறன் கொண்டிருக்கும்.

nonlinear function : நேரிலாப் பணி : ஒரு பணியை நேர் என்று சொல்வதானால் அதன் ஒரு அளவு வேறொன்றிலிருந்து நேர் விகிதத்தில் மாறுபட்டிருக்கும்.ஆகவே அதன் வரைபடம் செங்குத்துக்கோடாக இருக்கும்.

nonlinear programming : ஒரு படியிலாச் செயல்முறைப்படுத்துதல் : ஒரு குறிப்பிட்ட சார்பலனின் மிகக் குறைந்த அல்லது மிகஉயர்ந்த மதிப்பினைக் கண்டறிவதற்காகப் பயன்முறைக் கணிதத்தில் உள்ள பகுதி. வகுத்துரைக்கப் படும் மாறிகள் அனைத்தையும் இதனால் கண்டுபிடிக்கலாம். இது ஒரு படிச்செயல் முறைப்படுத்துதலிலிருந்து வேறு பட்டது.

nonmaskable interrupt : மறைக்கவியலாக் குறுக்கீடு : மென்பொருள் மூலம் மற்றும் விசைப்பலகை அல்லது அது போன்ற சாதனங்களின் மூலம் உருவாக்கப்படும் குறுக்கீட்டுக் கோரிக்கைகளை மீறி முன்னுரிமை எடுத்துக் கொள்கின்ற ஒரு வன்பொருள் குறுக்கீடு இவ்வாறு அழைக்கப்படுகிறது. இத்தகைய குறுக்கீட்டை பிற சேவைக் கோரிக்கைகள் மீறி விட முடியாது. மிகமோசமான நினைவகப் பிழை நிகழும்போது அல்லது மின் தடங்கலின்போது மட்டுமே இத்தகு மறைக்கவியலாக் குறுக்கீடு நுண்செயலிக்கு அனுப்பப்படும்.