பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1018

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

1017


.nr 1017 NSTL

.nr : .என்.ஆர் : ஒர் இணைய தள முகவரி நெளரு நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப் பெயர்.

NRZ : என்ஆர்இசட் : சுழி (பூஜ்யம்)க்குத் திரும்பாதிருப்பதைக் குறிக்கும். 'Non-return to zero' என்ற ஆங்கிலச் சொற்றொடரின் தலைப்பெழுத்துச் சொல். எண்முறைத் தரவுகளைக் காந்த நாடாவில் குறியீடாகப் பதிவு செய்வதற்கான பல முறைகளில் ஒன்று.

ns : என்எஸ் : நானோ விநாடி (Nanosecond) என்பதன் சுருகம். இது ஒரு விநாடியில் நூறு கோடியில் ஒரு பகுதியாகும்.

NSAPI : என்எஸ்ஏபிஐ : நெட்ஸ்கேப் வழங்கன் பயன்பாட்டு நிரலாக்க இடைமுகம் எனப்பொருள்படும் Netscape Server Application Programming interface என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும் பெயர். நெட் ஸ்கேப் ஹெச்டீடீபீ வழங்கனுக்கும் ஏனைய பயன்பாட்டு நிரல்களுக்கும் இடையேயான இடைமுகத்துக்கான வரன்முறைகளை இது குறிக்கிறது. ஒரு வலை உலாவியிலிருந்து வலை வழங்கன் மூலமாகப் பயன்பாட்டு நிரல்களை அணுகுவதற்கு இதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

.ms.ca : .என்.எஸ்.சி.ஏ : ஒர் இணைய தள முகவரி கனடா நாட்டின் நோவா ஸ்காட்டியா மாநிலத்தைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

NSFnet : என்எஸ்எஃப்நெட் : அமெரிக்க நாட்டின் தேசிய அறிவியல் கழகம் (National Science Foundation) உருவாக்கிய விரிபரப்புப் பிணையம். ஆர்ப்பா நெட்டுக்குப் (ARPAnet) பதிலாக சிவில் பயன்பாடுகளுக்காக உருவாக்கப்பட்டது. 1995 ஆண்டு வரை இணையத்தின் முதுகெலும்பாய்த் திகழ்ந்தது. அமெரிக்க நாட்டில் இணையத்துக்கான முதுகெலும்புச் சேவைகளை இப்போது தனியார் பிணையங்கள் வழங்கி வருகின்றன.

NST : என்எஸ்டி : ஒரு கட்டளையின் ஆரம்பத்துக்கும் முடிவுக்கும் இடையில் வேறு ஒரு கட்டளையை உள்ளே நுழைத்தல்.

NSTL : என்எஸ்டிஎல் : National software testing laboratory என்பதன் குறும்பெயர். ஒரு அமெரிக்க தனியார் மென்பொருள் சோதனை மற்றும் மதிப்பீட்டு நிறுவனம்.