பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1019

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

1018


ΝΤ 1018 NTSC

NT : என்டி (விண்டோஸ்) : மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் பிணைய இயக்க முறைமை. கிளையன்ட்/ செர்வர் தொழில் நுட்பத்தில் அமைந்த செர்வர் இயக்க முறைமை. விண்டோஸ் 95/98-ன் வரைகலைப் பணிச் சூழல் என்டியில் உண்டு. வருங்காலத்தில் 'விண்டோஸ் என்டி' என்பது விண்டோஸ் 2000 என்று பெயர் மாற்றம் பெறுகிறது. ஆல்பா செயலிகள் மிப்ஸ் (MIPS). தொழில்நுட்ப செயலிகள் மற்றும் இன்டெலின் 86 வரிசைச் செயலிகள் ஆகியவற்றிலும் என்.டி. (NT) இயங்கும்.

.nt.ca .என்டீ.சிஏ : ஒர் இணைய தள முகவரி. கனடா நாட்டின் வடமேற்கு பிரதேசத்தைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

NTFS : என்டிஎஃப்எஸ் : என்டீ கோப்பு முறைமை என்று பொருள்படும் NT File System என்பதன் சுருக்கம். விண்டோஸ் என்டீ இயக்க முறைமைக்கென தனிச்சிறப்பான முறையில் வடிவமைக்கப்பட்ட உயர்நுட்பக்கோப்பு முறைமை. இதில், நீண்ட கோப்புப் பெயர் இயலும். முழுமையான பாதுகாப்புள்ள அணுகல் கட்டுப்பாடு, கோப்பு முறைமை மீட்பு, மிகப் பரந்த சேமிப்பு ஊடகம் மற்றும் விண்டோஸ் என்டீ போசிக்ஸ் (POSIX) துணை முறைமைக்கான சிறப்புக் கூறுகளை உள்ளடக்கியது. பொருள் நோக்குப் பயன்பாடுகளையும் ஏற்கிறது. அனைத்துக் கோப்புகளையும் பயனாளர் மற்றும் முறைமை வகுத்த பண்புக் கூறுகள் கொண்ட பொருள்களாகவே கருதிச் செயல்படுகிறது.

NTP : என்டீபீ : பிணைய நேர நெறிமுறை என்று பொருள்படும் Network Time Protocol என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஒரு கணினியின் உள்ளமை நேரத்தையும் அது தொடர்பு கொள்ளும் வழங்கன் கணினி அல்லது வானொலி, செயற்கைக் கோள் வாங்கி, மோடம் போன்ற பிறவற்றின் நேரத்தையும் ஒத்திசைவாக்கப் பயன்படுகிறது. குறும்பரப்புப் பிணையங்களில் ஒரு மில்லி வினாடிக்குள்ளான துல்லியம் பெற முடியும். விரிபரப்புப் பிணையங்களில் துல்லியம் சில பத்து மில்லி வினாடிகள்.

NTSC : என்டிஎஸ்சி : தேசியத் தொலைக்காட்சி அமைவனக்குழு (National Television System