பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1032

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

OEM

1031

office of the future


யும் ஒரு கருவி.சைக்கிள் மோட்டார் வாகனங்களில் பயன்படுவது.

OEM : ஓஇஎம் : "மூலச் சாதனத் தயாரிப்பாளர்" என்று பொருள்படும் "Original Equipment Manufacturer நிறுவனத்தின் குறும் பெயர்.இந்த அமைவனம் பொருள்களிலும் சாதனங்களிலும் அமைப்பிகளாகப் பயன்படுத்துவதற்காகக் கணினி களையும், புறநிலைச் சாதனங்களையும் வாங்கி, அவற்றைத் தனது வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்கிறது.

off : விடுப்பு : நிறுத்து.

off-hook : கொக்கிக்கு வெளியே : சுழற்றி, வெளியே பேசக்கூடிய தொலைபேசிக் கம்பியின் நிலை.உள்ளே வரும் தொலைபேசி அழைப்பை ஏற்று பதில் பேச தடை செய்கிறது.தொலைபேசி உருவான காலத்தில் கைக்கருவியை கொக்கியிலிருந்து வெளியே எடுத்து பேசியதைக் கொண்டு இச்சொல் உருவானது.on-hook என்பதற்கு எதிர்ச்சொல்.

office application : அலுவலகப் பயன்பாடுகள்.

office automation : அலுவலகத் தானியக்கம்; அலுவலகத் தன்னியக்கம் : எழுத்தர் மற்றும் மேலாண்மை அலுவலகப் பணியாளர்களின் ஆக்கத்திறனை மேம்படுத்துவதற்குக் கணினி களையும் செய்தித்தொடர்புத் தொழில் நுட்பத்தையும் பயன்படுத்துதல்.

office computer : அலுவலகக் கணினி : ஓர் அலுவலகத்தில் பயன்படுத்துவதற்கான ஒரு நுண்கணினியமைவு.குறிப்பிட்ட அலுவலகப் பணிகளுக்காகத் தயாரிக்கப்பட்டுள்ள வட்டு அலகுகள், அச்சடிப்பி, மென்பொருள் போன்றவை இதில் உள்ளடங்கும்.

office information system : அலுவலகத் தகவல் பொறியமைவு;அலுவலகத் தகவல் அமைப்பு : சொல் செய்முறைப் படுத்திகள் வரைகலை முனைய அச்சடிப்பிகள்.கணினியமைவு போன்ற பல்வேறு தகவல் குறிப்புப் பதிவு முனையங்கள் உள்ளடங்கிய பொறியமைவு.

office links : அலுவலகத் தொடுப்புகள்.

office of the future : வருங்கால அலுவலகம் : கணினி தரவுச் செய்தித் தொடர்பு முறைகள் பிற மின்னணுவியல் தொழில்நுட்பங்கள் ஆகியவற்றைப் பெருமளவில் பயன்படுத்தும் எதிர்கால அலுவலகம்.