பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1082

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

parallel reading

1081

parameter RAM


parallel reading : ஒரு போகு படிப்பு;இணை வாசிப்பு : ஒரு தரவு அட்டையிலிருந்து வரிசை வரிசையாகப் படித்தல். இது தொடர் படிப்பிலிருந்து வேறு பட்டது.

parallel run : ஒருபோகு ஓட்டம்;இணையோட்டம் : ஒரு புதிய பொறியமைவினை அல்லது செயல்முறையினை பழைய பொறி யமைவுக்கு இணையாக ஒட்டுதல். இது எளிதான அனுப்பீட்டுக்கும் பிழையின்றி மாற்றம் செய்வதற்கும் உதவுகிறது.

parallel server : இணைநிலை வழங்கன் : வழங்கனின் செயல்திறனை மேம்படுத்த ஏதேனும் ஒருவகை இணைநிலைச் செயலாக்கத்தை நடைமுறைப்படுத் தும் கணினி அமைப்பு.

parallel transmission : இணைப் பரப்புகை;ஒருபோகு அனுப்பீடு;இணை செலுத்தம் : தகவல் தொடர்புகளில் தரவு மாற்றத்திற்கான ஒரே முறை. இதில் ஒரு கணினியின் துண்மிகள் அனைத்தும் ஒரே சமயத்தில் பொருத்தப்படுகின்றன. இது, தொடர் அனுப்பீட்டிலிருந்து வேறுபட்டது.

parameter : நிலையளவுரு : 1. வரம்பற்ற மாறி, முக்கியமாக ஒரு குறிப்பிட்ட பொறியமைவின் ஒரு பண்பு அல்லது வரை நிலை அடை மொழி. 2. ஒரு மாறிலியின் பண்புகளைத் தற்காலிகமாக ஏற்றுக்கொள்ளும் ஒர் இயற்கணித எண்ணுருக் கோவையிலுள்ள மாறிலி.

parameter block : அளவு கோல் கட்டம் : ஒரு சாதனம் அல்லது இயக்க அமைப்புப் பணியில் பயன்படுத்திய தரவுவை நீடித்திருக்க நினைவகத்தில் அமைக்கப்பட்டுள்ள மாறிலிகளின் தொகுதி.

parameter-driven : அளபுரு முடுக்கம் : ஒரு நிரல் அல்லது செயல்பாட்டின் இயல்பு அல்லது வெளியீடு, அதற்கு வழங்கப்படும் அளபுருக்களின் மதிப்புகள் அடிப்படையில் தீர்மானிக்கப்படுவது.

parameter passing : அளபுரு அனுப்புகை : நிரலாக்கத்தில் ஒருவகைச் செயலாக்கம். ஒரு செயல்முறை அல்லது செயல்கூறின் அழைப்பு செயல் படுத்தப்படும்போது குறிப்பு அளபுருக்களுக்கு மெய்யான அளபுருக்களின் மதிப்புகளைப் பதிலீடு செய்வது.

parameter RAM : அளபுரு ரேம் : ஆப்பிள் மெக்கின்டோஷ் கணினிகளின் தாய்ப்பலகை களில் மின்கலத்தின் உதவியால்