பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1096

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

PCX

1095

ΡDΑ


மொத்த பேக்கேஜ். டாஸ் ஷெல் மற்றும் கோப்பு மேலாண்மை, தகவல் தொடர்புகள், வட்டு நினைவகப்படுத்தல், பின் ஆதரவு மற்றும் தரவு நெருக்குப் பயன் பாடுகளைக்கொண்டது.

PCX : பீசிஎக்ஸ் : இசட் சாஃப்ட் கார்ப்பரேசன் உருவாக்கிய பரவலாகப் பயன்படுத்தப் படும் ராஸ்டர் வரைகலை சேர்ப்புப் படிவம். இது மோனோ கிராம் மற்றும் வண்ண முகப்பின் 2 துண்மி, 4 துண்மி, 8 துண்மி மற்றும் 24 துண்மிகளைக் கையாள்வதுடன் 1 : 1 : 1 முதல் 1 : 5 : 1 வரையிலான சுருக்க விகிதத்தை எட்டுகிறது.

PC/XT : பீசி/எக்ஸ்டீ : 1981இல் அறிமுகப்படுத்தப்பட்ட மூல ஐபிஎம் சொந்தக் கணினி. இன்டெல் 8088 மையச் செயலகத்தைக் கொண்டது.

பீசி/எக்ஸ்டி விசைப் பலகை

PC/XT keyboard : பீசி/எக்ஸ்டீ விசைப்பலகை : ஐபிஎம் சொந்தக் கணினிக்கான மூல விசைப்பலகை திடமானது. நம்பகமானது. 83 விசைகள் கொண்டது. இதில், விசைகளை அழுத்தும்போது ஒரு தட்டச்சருக்கு கிளிக் என்னும் சத்தம் கேட்கும்.

PDA : பீடிஏ : சொந்த இலக்க முறைத் துணைவன் என்று பொருள்படும் Personal Digital Assistant என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஒரு குறுபயன் உள்ளங்கைக் கணினி. குறிப்பிட்ட சில வசதிகளை மட்டும் கொண்டது. நாட்காட்டி, குறிப்பெடுத்தல், தரவுத் தளம், கணிப்பான் போன்ற சில தனிநபர் பயன்பாடுகளையும் தகவல் தொடர்பு வசதியையும் கொண்டது. பெரும்பாலான பீடி. ஏ. க்கள் விசைப்பலகை, சுட்டி போன்ற உள்ளிட்டுக் கருவிகளுக்குப் பதிலாக பேனா அல்லது அது போன்ற சுட்டுக் கருவிகளைக்