பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Petri nets

1106

Phase modulation


படுத்தியது. முதல் மூன்று தனி நபர் கணினிகளில் இதுவும் ஒன்று.

Petri nets : பெட்ரி வலைகள் : ஒரு போகு ஒருங்கிணைவுடன் கூடிய பொறியமைவுகளைக் குறிப்பதற்கான பயனுள்ள மாதிரி உருவம்.

. pg : பீஜி : ஒர் இணைய தள முகவரி பாப்புவா நியூ கினியா நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

PGP : பீஜிபீ : மிகச் சிறந்த அந்தரங்கம் என்று பொருள்படும் Pretty Good Privacy என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஃபிலிப் ஸிம்மர் மான் (Philip Zimmermann) உருவாக்கிய ஆர்எஸ்ஏ படிமுறைத் தருக்கத்தின் அடிப்படையில் அமைந்த பொதுத்திறவி மறையாக்க (Public Key Encryption) முறைக்கான ஒரு நிரல். பீஜிபீ. மென்பொருளின் பராமரிப்பு உதவியில்லாத இலவசப் பதிப்பும், உதவியுள்ள வணிகப் பதிப்பும் கிடைக்கின்றன.

. ph : பிஹெச் : ஒர் இணைய தள முகவரி ஃபிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

phase : அலையிடைப்படி;மாறுபாட்டுக் கோணம்;அலை ஒப்புப் படிநிலை : ஒரே அலை வரிசை உள்ள இரு சமிக்கைகளுக்கு இடையே உறவு நிலையை ஒப்பிடும் அளவீடு. இது கோணங்களில் அளக்கப்படுகிறது. ஒரு முழு அலைவுச் சுழற்சிக்கு 360 டிகிரிகள். ஒரு சமிக்கை இன்னொன்றை 0 முதல் 180 டிகிரிகள் வரை முந்தவோ பிந்தவோ முடியும்.

Phase change recording : நிலை மாற்றப் பதிவிடல் : ஒளிமுறை பதிவாகும் தொழில் நுட்பம். உலோக மேற்பரப்பின் படிகப் பகுதியில் மாற்றியமைப்பதன் மூலம் துண்மியை உருவாக்க லேசர் பயன் படுத்தப்படுகிறது. படிக்கும்போது துண்மி ஒளியைப் பிரதிபலிக்கிறது அல்லது ஏற்றுக் கொள்கிறது.

Phased conversion : படிப்படி மாற்றம் : பழைய தரவு அமைப்பிற்குப் பதிலாகப் புதிய அமைப்பினைப் படிப்படியாகப் புகுத்துவதற்கான பொறி யமைவு நிறைவேற்ற முறை. இது நேரடி மாற்றத்திற்கு (direct conversion) மாறுபட்டது.

phase encoding : அலையிடைப் படி குறியாக்கம் : 1. தொடர் முறை (Analog) சுமப்பி அலை