பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

authoring tool

110

auto bypass


 authoring tool : படைப்பாக்கக் கருவி : பல் ஊடகப் பொருளை உருவாக்க உதவும் மென் பொருள். பல்ஊடகம் வழங்குதற்குரிய தேவையான சூழ்நிலையையும் அது உருவாக்கித் தரும்.

authorized programme : ஏற்கப் பெற்ற நிரல்.

authorization : ஏற்புறுதி; அனுமதி அளித்தல் : செயலாக்கம் நடைபெறுவதற்கு முன்பு குறிப்பிட்ட அனுமதி பெறவேண்டிய கணினி அமைப்பின் கட்டுப்பாட்டுத் தன்மை.

authorization code : ஏற்புறுதி குறிமுறை; அங்கீகாரக் குறியீடு : கணினி அமைப்பை அணுக அனுமதிக்கும் நுழை சொல் (password) அல்லது அடையாள எண்.

authorization distribution list : ஏற்புறுதி விநியோகப் பட்டியல்; அங்கீகரிப்பு விநியோகப் பட்டியல் : குறிப்பிட்ட அறிக்கைகளின், அங்கீகரிக்கப் பட்ட பயனாளரின் பட்டியல். தகுதி பெறுபவர்களுக்கு மட்டுமே பிரதிகள் விநியோகிக்குமாறு கட்டுப்படுத்த உதவுகிறது.

authorization level : ஏற்கப்பட்ட ஆணைத் தொடர் மட்டம்.

authorization programme : ஏற்புறுதி; அங்கீகரிப்பு நிரல் : ஒரு கணினி அமைப்பின் தகுதி அல்லது அடிப்படை இயக்கத்தை மாற்றக் கூடிய ஒரு கணினி செயல்முறை.

author language : படைப்பாக்க மொழி : கணினி வழி கற்பித்தலுக்கான மென் பொருள்களை உருவாக்கப் பயன்படுத்தப்படும் கணினி மொழி.

authors : படைப்பாளிகிள் ஆசிரியர்கள் : கணினி வழிக் கற்றலுக்கான பாட முறைமைகளை வடிவமைப்போர்.

author styles : படைப்பாக்க பாணி

auto answer : தானியங்குப் பதில் : கணினிகளிலிருந்து வரும் தொலைபேசி அழைப்புகளுக்கு தானியங்கு முறையில் மோடெம் ஒன்றிலிருந்து மற்றொரு கணினிக்கு பதிலை அனுப்புதல்

auto attendent : தானியைங்குப் உதவிப் பொறி : மனிதர்கள் இயக்குவதற்கு மாற்றாகக் குரலை சேமித்து அனுப்பி வைக்கும் அமைப்பு அழைப்பவர்களைக் குரல் அஞ்சல் பெட்டிகளுக்கு அனுப்பி வைப்பது.

auto bypass : தானே ஒதுஇங்கிப் போதல் : கட்டமைப்பில் உள்ள ஒரு குறிப்பிட்ட முனையமோ

அல்லது பிற சாதனமோ