பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

portable document software

1134

port enumerator


ஆவண வடிவாக்கம். சுருக்கமாக பீடிஎஃப் (PDF) என அழைக்கப்படும்.

portable document software : கையாளத்தகு ஆவண மென்பொருள்.

portable language : கையாண்மை மொழி : வேறு வேறு கணினிகளில் ஒன்றுபோலச் செயல்படும் ஒரு கணினி மொழி. வெவ்வேறு கணினி அமைப்புகளுக்கான மென்பொருள்களை உருவாக்க இம்மொழியைப் பயன்படுத்தலாம். சி, ஃபோர்ட்ரான், அடா போன்ற மொழிகள் இந்த வகையைச் சார்ந்தவை. ஏனெனில் இவை வெவ்வேறு கணினி இயக்கமுறைமைகளில் ஒன்று போலச் செயலாக்கப்படுகின்றன. அசெம்பிளி மொழி கையாண்மைத் திறனற்ற மொழியாகும். குறிப்பிட்ட அசெம்பிளி மொழியின் நிரல் தொகுதி குறிப்பிட்ட நுண்செயலியில் மட்டுமே செயல்படும்.

portable netware : ஒத்தியல்பு நெட்வேர் : நாவெலின் நெட்வேர் ஆப்ப ரேட்டிங் சிஸ்டத்தின் ஒ. இ. எம். பதிப்பு. குறிப்பிட்ட விற்பனையாளரின் எந்திரத்திற்காக அதைத் தொகுக்கலாம்.

Portable Network Graphics : கையாண்மைப் பிணையவரைகலை : பிட்மேப் வரைகலைப் படிமங்களைச் சேமிப்பதற்கான ஒரு கோப்பு வடிவாக்க முறை. ஜிஃப் (GIF) வடிவாக்க முறைக்கு மாற்றானது. ஆனால் ஜிஃப் வடிவாக்க முறைக்குள்ள சட்டக் கட்டுதிட்டங்கள் எதுவுமில்லை. சுருக்கமாக பீஎன்ஜி (png) என்பர்.

portable programme : ஒத்தியல்வுச் செயல்முறை : ஒத்தியல்வுக் கணினி யமைவில் பயன்படுத்தக்கூடிய பொருள்.

port address : துறை முகவரி : ஒரு துறைக்கு முகவரியிடும் 0 முதல் 65535-க்குள்ளான ஒரு எண். நினைவக முகவரிகளிட மிருந்து துறை முகவரிகள் வேறுபட்டவை. அசெம்பிளி மொழியின் நிரல்களும் பேசிக் மொழியின் நிரல்களும் துறைகளை அணுக உதவும்.

portal : வலைவாசல்.

port conflict : துறை முரண்.

port enumerator : துறைக் கணக்கெடுப்பி : விண்டோஸ் இயக்க முறைமையில் இணைத்து இயக்கு (play and play) அமைப்பின் ஒர் அங்கம். கணினியை இயக்கும்போது, இந்த நிரல் உள்ளிட்டு/வெளியீட்டுத் துறை களைக் கண்டறிந்து தகவமைவு