பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



automatic quality control

115

automatic teller machine


automatic quality control : தானியங்கு தரக் கட்டுப்பாடு : செயலாக்கப்படும் பொருளின் தரத்தை, ஏற்கெனவே நிர்ண யிக்கப்பட்ட தர அடிப்படையில் சோதித்து;நிர்ணயிக்கப்பட்ட தரத்துக்கும் குறைவாக இருக்கு மானால், சரி செய்வதற்கான நட வடிக்கையினை மேற்கொள் வதற்கான உத்தி.

automatic recharge : தானியங்கு மறு மின்னேற்றம்.

automatic recovery programme : தானியங்கு மீட்பு நிரல் : வன்பொருள் செயலிழத் தலின்போது கட்டுப்பாட்டை ஏற்றுக்கொண்டு கணினியை இயங்க வைக்கும் ஒரு நிரல்.

automatic reformating : தானியங்கு மறுவடிவாக்கம் : சொல் செயலியில் மாற்றங்களை ஏற்று வரிகளைத் தானாகச் சரிசெய்து கொள்ளல்.

automatic scrolling : தானியங்கு உருளல் : ஒரு நீண்ட ஆவணம் கணித் திரையில் கீழ் மேலாக அல்லது மேல் கீழாக உருண்டு செல்லல்.

automatic shutdown : தானியங்கு பணி நிறுத்தம் : ஒழுங்கு முறைப்படி பிணையம் (Network) ஒன்றை அல்லது கணினியின் செயல்பாட்டை முழுமையாக ஒழுங்கான முறையில் நிறுத்துவதற்கான மென்பொருள் ஒன்றின் திறன்.

automatic system reconfiguration : தானியங்கு முறைமை மறுதகவமைப்பு : ஒரு கணினியில் புதிதாக ஒரு வன்பொருளையோ மென்பொருளையோ சேர்க்கும்போது அல்லது மாற்றும்போது கணினி முறைமை தானாகவே தகவமைத்துக் கொள்ளுமாறு செய்தல்.

automatic tag reader : தானியங்கிப் படிப்பி : வட்டமான ஒட்டைகள் உடைய துளையிட்ட அட்டைகளைப் படித்தறியும் ஒரு சாதனம்.

automatic teller machine (ATM) : தானியங்கிப் பணப் பொறுப்பு எந்திரம் : வங்கி ஒன்றின் முனையம். அது வாடிக்கையாளருக்கு 24 மணி நேர வைப்பு மற்றும் திரும்பப்பெறும் சேவைகளை வழங்குகிறது. வங்கிக் கணினியுடன் இணைக்கப்பட்ட சிறப்பு நோக்கமுடைய கருவி. தானியங்கிக் கருவியை வாடிக்கை யாளர் இயக்க, ஒரு பிளாஸ்டிக் அடையாள அட்டையைச் செருகி, சிறப்பு அனுமதிக் குறியீட்டை குறிப்பிடுகிறார். இதன்மூலம் பணம் எடுக்கவும் தன்