பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

automatic typewriter

116

autopolling


கணக்கு பற்றிய விவரங்களை அறியவும் முடியும்.

automatic typewriter : தானியங்கு தட்டச்சுப்பொறி.

automatic verifier : தானியங்கு சரிபார்ப்பி.

automation : தானியங்கு முறை ;தானியங்கி : 1. நடைமுறை ஒன்றை தானியங்கு முறையில் செயல்படுத்துதல், 2. கருவி அல்லது நடைமுறை அல்லது முறைமையினை மனித நோக்கு, முயற்சி அல்லது முடிவுக்கு மாற்றாக, பொறியமைவு அல்லது மின்னணுவியல் கருவி மூலம் தானியங்கு முறையில் கட்டுப்படுத்தும் செயல்.

automonitor : தானியங்கு கண்காணிப்பி : 1. கணினி நடவடிக்கைகளின் கணினிப் பதிவேடு. 2. கணினி ஒன்றின் செயல்பாட்டு நடைமுறைகளை பதிவு செய்யும் கணினி மென்பொருள்.

auto outline : தானியங்கு சுற்றுக் கோடு

auto pilot : தானியங்கு விமானி : விமானம் ஒன்றை அல்லது விண்வெளிக் கலத்தை பறக்கச் செய்ய உதவும் கருவி.

AutoPlay : தானியக்கம் : குறுவட்டு இயக்ககத்தில் ஒரு குறுவட்டு வைக்கப்பட்டவுடன் தானாகவே இயங்குமாறு அமைக்கப்பட்டுள்ள ஒரு வசதி, விண்டோஸ் 95/98 இயக்க முறைமையில் உள்ளது. அந்தக் குறுவட்டில் Auto - Run-INF என்னும் ஒரு கோப்பு இருக்க வேண்டும். குறுவட்டு, இயக்ககத்தில் செருகப்பட்டவுடன், விண்டோஸ் இக்கோப்பினைத் தேடும். (அவ்வாறு தேடும்படி நாம் முன்பே விண்டோசுக்கு அறிவுறுத்தியிருக்க வேண்டும்). அக்கோப்பு இருப்பின் அதில் குறிப்பிட்டுள்ள கட்டளைகளின்படி விண்டோஸ் செயல்படும். பெரும்பாலும் கணினியின் நிலைவட்டில் ஒரு பயன்பாட்டுத் தொகுப்பை நிறுவுவதற்கான கட்டளையாக இருக்கும். ஒரு கேட்பொலிக் குறுவட்டினைச் செருகியவுடன் விண்டோஸ், பாடலைப் பாட வைக்கும் பயன்பாட்டை இயக்கி, குறு வடடிலுள்ள முதல் பாடலை தானாகவே பாட வைக்கும்.

autopolling : தானியங்கு சோதனை : தானியங்கு பதிவு முறை. இம்முறையில் கணினி பிணையம் ஒன்றின் முனையங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில், தகவல்களை அனுப்பத்தயார் நிலையில் உள்ளனவா என்பதை அறிய சோதிக்கப்படுகின்றன. கணினி