பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

production database

1169

professional write


production database : உற்பத்தித் தரவுத் தளம் : ஒரு நிறுவனத்தின் முக்கிய கோப்புகள் மற்றும் அன்றாட பரிமாற்றக் கோப்புகளை கொண்ட மைய தரவுத் தளம்.

production run : உற்பத்தி ஒட்டம் : வாலாயமாகத் தன் நோக்கத்தை நிறைவேற்றுகிற ஒரு செயல்முறையில் தவறு நேரிடும்போது அச்செயல் முறையை நிறைவேற்றுதல். எடுத்துக்காட்டு : வாராந்திர சம்பளப்பட்டியல் தயாரிப்பதற்கு ஒரு சம்பளப் பட்டியல் செயல்முறையை இயக்குவது ஒர் உற்பத்தி ஒட்டம் ஆகும்.

production system : உற்பத்தி அமைப்பு : ஒரு நிறுவனத்தின் அன்றாட வேலையைச் செயலாக்கம் செய்யப் பயன்படுத்தும் கணினி அமைப்பு. வளர்ச்சி மற்றும் சோதனை அல்லது தற்காலிக கேள்விகளுக்கும் ஆய்வுக்கும் பயன்படும் அமைப்புகளுடன் இதனை மாறுபடுத்திப் பார்க்க.

productivity : உற்பத்தித் திறன் : ஒரு மென்பொருள்வன்பொருள் பொறியமைவு செய்யும் பணியினை அளவிடுதல். இது பெரும்பாலும் பொறியமைவின் வசதிகளையும் செயல்திறனையும் பொறுத்தது.

professional : தொழில்துறை;தொழில்சார்ந்த, தொழில் தரமான; தொழில்நெறிஞர்.

Professional Graphics Adapter : தொழில்முறை வரைகலைத் தகவி : கேட் (CAD) பயன்பாடு களுக்கென ஐபிஎம் நிறுவனம் அறிமுகப் படுத்திய ஒரு ஒளிக் காட்சித் தகவி. கிடைமட்டத் தெளிவாக 640 படப்புள்ளி களையும், செங்குத்துத் தெளிவில் 480 படப்புள்ளிகளையும் 256 நிறங் களையும் கொண்டது.

Professional Graphics Display : தொழில்முறை வரைகலைக் காட்சித்திரை : ஐபிஎம் நிறுவனம் தன்னுடைய தொழில் முறை வரைகலைத் தகவியுடன் பயன்படுத்தப்பட வேண்டும் என்ற எண்ணத்தில் அறிமுகப் படுத்திய தொடர்முறை (Analog) காட்சித்திரை.

professional write : தொழில்சார் எழுத்து : சாஃப்ட்வேர் பப்ளிஷிங் நிறுவனத்தின் டாஸ் மற்றும் விண்டோசுக்கான சொல் செயலாக்க நிரல் தொடர். பயன்படுத்த எளிதானது. குழப்பமில்லாத கடிதங்கள் மற்றும் குறிப்புகளை எழுதுபவர்களின் தேவைகளை-அது சமாளிக்கிறது.

PFS : Write என்று முதலில் அழைக்கப்பட்ட இது