பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

radiation patterns

1203

radio shack


இவ்வாறு, ஒரு கோணத்தின் ஆரைக் கோண அளவு என்பது, அந்தக் கோணத்திற்கு எதிர் வீழ்வாகவுள்ள வில், அந்தக் கோணம் எந்த வட்டத்தின் மையக் கோணமாக இருக்கிறதோ அந்த வட்டத்தின் ஆரத்தின் வீத அளவில் இருக்கும்.

radiation patterns : கதிவீச்சுத் தோரணிகள் : ஒரு வானொலிச் செய்தித் தொடர்புப் பொறியமைவில், ஆதார அலைவரிசைச் சைகையானது, ஏதேனுமொரு அதிர்விணக்கத்தினைப் (modulation) பயன்படுத்தி அலைவெண் நிறமாலையின், ஒரு குறிப்பிட்ட பகுதியில் நிலைப்படுத்தப்படுகிறது. அதிர்விணக்கப்படுத்திய அலை பின்னர் ஒர் அனுப்பீட்டு வானலை வாங்கியின் அல்லது வான் கம்பியின்மூலம் ஒரு மின்காந்த அலைவடிவில் வாயு மண்டலத்தில் கதிர்வீச்சு செய்யப்படுகிறது.

radio : வானொலி.

radio butttons : வானொலிப் பொத்தான்கள் : ஒரேயொரு தேர் வினை மட்டுமே அனுமதிக்கக் கூடிய திரைமீதான பொத்தான்களின் வரிசை. ஒரு பொத்தான் தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டால், வேறொரு பொத்தான் தேர்ந்தெடுக்கப்படும் போது முதல் பொத்தான் தேர்வு நீக்கப்பட்டு விடும்.

radio clock : வானலைக் கடிகாரம் : நிகழ்நேர சமிக்கைகளுடன்கூடிய, வானில் பரப்பப்படும் அலைகளைப் பெறக்கூடிய ஒரு சாதனம். இவ்வகைக் கடிகாரங்கள் பிணையத் தகவல் தொடர்பில் பயன்படுத்தப்படுகின்றன. பிணைய நேர நெறிமுறை (Network Time Protocol) யின் அடிப்படையில், புரவன் கணினியின் (Host) வன்பொருள் கடிகார நேரத்தை, உலகப் பொது நேர ஆயக்கூறு வடிவமைப்புடன் ஒத்திசையும்படி செய்ய இவை பயன்படுகின்றன.

radio frequency : வானொலி அலைவரிசை : சுருக்கமாக ஆர்எஃப் எனப்படுகிறது. மின்காந்த அலைக்கற்றையில் 3 கிலோ ஹெர்ட்ஸ்-300 கிகா ஹெர்ட்ஸுக்கு இடைப்பட்ட அலைவரிசை. இது 30 மி. மீ-0. 3 மி. மீ அலைநீளத்தோடு உறவுடைய அலைவரிசை.

radio shack : மின்னணுவியல் கருவி உற்பத்தியாளர் : நுண் கணினியமைவுகள் உள்ளடங்களாக மின்னணுவியல் சாதனங்களை உற்பத்தி செய்து விற்பனை செய்பவர்.