பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

read and write classes

1215

readme file


read and write classes:படி/எழுது இனக்குழுக்கள்.

reader:படிப்பி:ஒர் உட்பாட்டுச் சாதனத்திலிருந்து கிடைக்கும் தரவுகளை எழுதித் தரும் ஒரு சாதனம்.

reader,card:அட்டைப் படிப்பு.

reader,character:எழுத்துப் படிப்பி.

'reader,film:படம் படிப்பி.

reader, magnetic ink character:காந்த மை எழுத்துப் படிப்பி.

'reader, paper tape:தாள் நாடாப் படிப்பி.

read error:படிப்புப்பிழை:ஒரு சேமிப்பகத்தில் அல்லது நினைவகத்தில் உள்ள தகவல்களைப் படிக்கத் தவறுதல். இது வாலாயமான நிகழ்வு இல்லை யெனினும்,காந்த மற்றும் ஒளியியல் பதிவுப் பரப்புகள்,தூசியினால் அல்லது அழுக்கினால் மாசுபடக்கூடும்.அல்லது சேதமடையலாம். நினைவகச் சிப்புகளின் உயிரணுக்கள் சரிவர இயங்காமற் போகலாம்.

read head:படிப்பு முனை:செய்தித் தொடர்புச் சாதனங்களிலிருந்து தரவுகளைப் படிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட காந்தச் சுருள் முனை.

reading station:படிப்பு நிலையம்;படிக்கும் நிலையம்:ஒர் உணர்ந்தறிச் செயல்முறை மூலம் படிப்பதற்காக பொருத்தப்பட்டுள்ள ஒர் அட்டைத் துளையின்-விசைத்துளையின் பகுதி.

reading wand:படிப்புக் கோல்:குறிகள்,குறியீடுகளை ஒளியியல் முறையில் உணர்ந்தறிகிற சாதனம்.எடுத்துக்காட்டு:ஒரு விற்பனை முனையத்தில் விலைச்சீட்டுகளைப் படித்தறியும் சாதனம்.

reader,tape:நாடாப் படிப்பி.

README:என்னைப்படி ரீட்மீ:ஒரு மென்பொருளின் ஆவண மாக்கத்தில் சொல்லப்படாத,பயனாளருக்குத் தேவையான அல்லது பயனாளர் பார்த்து விவரம் பெறக்கூடிய தகவல்கள் அடங்கிய ஒரு கோப்பு. பெரும்பாலும் ரீட்மீ (Readme)கோப்பில் தகவல்கள் நேரடி உரை வடிவிலேயே(plain text format)வட்டில் எழுதப்பட்டிருக்கும். ஒரு குறிப்பிட்ட மென்பொருளில் மட்டுமே படிக்கும்படியானதாக இருக்காது. எந்த உரைத்தொகுப்பியிலும் படிக்கும்படியாகவே இருக்கும்.

readme file:'என்னைப்படி'கோப்பு:மென்பொருள் பகிர்மான வட்டுகளில் படியெடுக்கப்