பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

replacement theory

1247

report generator


என்னும் வசதி உள்ளது.இருக்கும் விவரத்தையும் புதிய விவரத்தையும் குறிப்பிட வேண்டும். எழுத்து வடிவம்(Upper/Lower case)எப்படியிருப்பினும் மாற்றச் செய்யவும் வசதி உண்டு.

replacement theory:பதிலமைவுக் கோட்பாடு:தேய்மானம்,செயலழிவு பற்றிய கணிதம். இது பதிலமைவுச் செலவினை மதிப்பிடுவதற்கும்,உகந்த அளவுப் பதிலமைவுக் கொள்கைகளைத் தீர்மானிப்பதற்கும் பயன்படுகிறது.

replay:மறு இயக்கம்;மீண்டும் இயக்கு.

replication:படியாக்கம்:ஒரு பகிர்ந்தமை தரவுத்தள மேலாண்மை அமைப்பில்,ஒரு தரவுத்தளத்தை அல்லது அதன் ஒரு பகுதியை பிணையத்தின் பிற பகுதியிலுள்ள கணினியிலும் நகலெடுத்து வைத்தல். பகிர்ந்தமை தரவுத்தள அமைப்புகள் ஒத்திசைவோடு விளங்க படியாக்கம் பயன்படுகிறது.

reply to all:அனைவருக்கும் பதிலிடு;யாவர்க்கும் பதில்.

report அறிக்கை:பொதுவாக,வெளிப்பாட்டுத் தரவுகளுடன் தொடர்புடையது.தொடர்புடைய செய்திகளைப் படிப்பவர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் வரைபடமாக்குதல் இதில் அடங்கியுள்ளது. பயனாளருக்குத் தரவுகளை வழங்குவதற்கான ஒரு பொதுவான வழிமுறை. பெரும்பாலான அறிக்கைகள் திரைக் காட்சியில்,அல்லது அச்சிட்ட பட்டியல்களில் காட்டப்படும்.

report, error:பிழை அறிக்கை.

report file:அறிக்கைக் கோப்பு:தரவுவைச் செய்முறைப்படுத்தும் போது உருவாக்கப்படும் கோப்பு. இது தேவையான வெளிப்பாட்டினை அச்சடிப்பதற்கு அல்லது காட்சியாகக் காட்டுவதற்குப் பயன்படுத்தப் படுகிறது.

report format:அறிக்கை படிவம்:பக்கம்,பத்தித் தலைப்புகள்,பக்க எண்கள்,கூட்டுத் தொகைகள் ஆகியவற்றைக் காட்டுகின்ற ஒர் அறிக்கையின் உருவமைவு.

report generation:அறிக்கை உருவாக்கம்:ஒரு தரவுத் தளக் கோப்பு முழுவதிலிருந்து அல்லது அதன் பகுதியிலிருந்து திரைக்காட்சி அல்லது வன்படி ஆவணம் உருவாக்குவதற்காகத் தரவுவைக் கையாள்தல்.

report generator:அறிக்கை உருவாக்கி:எந்திரம் படிக்கத்தக்க