பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

reset button

1251

residual value


வற்ற நிலைக்குத் திரும்பக் கொண்டு வருதல். 2. ஒர் இரும எண் சிற்றத்தை சுழி (பூஜ்ய) நிலைக்குக் கொண்டு வருதல்.

reset button : மறு இயக்கப் பொத்தான் : ஒரு வன்பொருள்/ மென்பொருள் செயலிழந்தபின் ஒரு கணினியை மறுபடியும் இயக்குவிக்கிற கணினிப் பொத்தான் அல்லது விடைக் குறிப்பு. எல்லா நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டுவிடும். நினைவகத்திலுள்ள தரவு எல்லாம் இழக்கப்பட்டு விடும். ஒர் அச்சுப்பொறியின் நினைவகத்தைத் துப்புரவு செய்து, கணினியிலிருந்து புதிய தரவுவை அது ஏற்றுக் கொள்வதற்கு அதனை மறுஇயக்கப் பொத்தான் தயார் செய்கிறது.

reset, cycle : மீட்பியக்கு சுழற்சி.

reset key : மாற்றமைவு விசை : ஒரு விசைப்பலகையிலுள்ள விசை. இது பொதுவாக ஒரு கணினியின் பகுதிகளை ஒரு செயல்முறை நிறைவேற்றப்படுவதற்கு முந்திய நிலைக்கு மாற்றுவதற்குப் பயன்படுத்தப் படுகிறது.

reset mode : மீளமைவுப் பாங்கு.

reside : நிலைநிறுத்தல் : நிலையாகப் பதிவு செய்து வைத்தல். எடுத்துக்காட்டு : ஒரு செயல் முறையை ஒரு வட்டில் அல்லது நினைவுப் பதிப்பகத்தில் நிலைநிறுத்தி வைக்கலாம்.

resident font : உள்ளமை எழுத்துரு : அச்சுப் பொறியினுள் அமைக்கப்பட்டுள்ள ஒர் எழுத்து முகப்பு. இதனை முன்னதாகக் கீழிறக்க வேண்டிய தேவையில்லை.

resident module : உள்ளமை தகவமைவு : நினைவகத்தில் எல்லா இடங்களிலும் இருக்கவேண்டிய ஒரு செயல்முறையின் பகுதி. நினைவகத்தில் இவ்வாறு தரவுகளையும், நிரல்களையும் உடனடியாக அணுகலாம்.

resident portion : நிலையான் பகுதி, நினைவகத்திடல் நின்று இயங்கும் பகுதி.

resident programme : நிலைப் புல நிரல் : ஒரு கணினியின் முதன்மை நினைவகத்தில் (ROMஅல்லது RAM) நிறைவேற்றத்திற்குப் பிறகு ஒரு குறிப்பிட்ட இடப்பரப்பை நிலையாக ஆக்கிரமித்துக்கொள்ளும் நிரல்.

residual value : எஞ்சிய மதிப்பளவு;எச்ச மதிப்பு : ஒரு குத்தகைக் காலத்தின் முடிவில் ஒரு சாதனத்தின் மதிப்பளவு.