பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1313

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

serial adder

1312

serial infrared


வரிசைமுறைத் தொடர்பு இருக்கிற சேமிப்புச் சாதனத்தின் அல்லது ஊடகத்தின் விவரிப்பு. அதாவது, அணுகு நேரம், தரவு அமைவிடத்தைப் பொறுத்து அமைந்திருத்தல். இதனை வரிசை முறை அணுகுதல் என்றும் கூறுவர். இது நேரடி அணுகு தலிலிருந்து வேறுபட்டது.

serial adder : தொடர்வரிசை கூட்டல்பொறி;தொடர் வரிசைக் கூட்டி : தொடர்புடைய எண்ணளவுகள் ஒவ்வொன்றிலிருந்தும் ஒரேசமயத்தில் ஒர் இலக்கத்தைக் கொண்டு வருவதன்மூலம் செயற்பாடுகளைச் செய்கிற கூட்டல் பொறி.

serial board : தொடர்நிலைத் தளம.

serial computer : தொடர் வரிசைக் கணினி, தொடர்நிலைக் கணினி : ஒவ்வொரு இலக்கமும் அல்லது ஒவ்வொரு தரவு சொல்லும், கணினி யினால் தொடர்வரிசையில் செய்முறைப்படுத்தப்படுகிற கணினி. இது இணைவுக் கணினி என்பதிலிருந்து வேறுபட்டது.

serial communication : நேரியல் தகவல் தொடர்பு : இரு கணினி களுக்கிடையே அல்லது ஒரு கணினிக்கும் பிற புறச்சாதனங்களுக்கும் இடையே நடைபெறும் தகவல் போக்குவரத்தில் ஒற்றைத் தடத்தில் ஒரு நேரத்தில் ஒரு துண்மி (பிட்) வீதம் தகவல் பரிமாற்றம் நடைபெறல். இத் தகைய தகவல் தொடர்பு நேர ஒத்திசைவு அல்லது ஒத்திசைவில்லா முறையில் நடைபெற முடியும். அனுப்பி, வாங்கி இரண்டுமே ஒரே பாட் (baud) வீதம், ஒரே சமன்பிட், ஒரே வகையான கட்டுப்பாட்டுத் தகவல்களையும் கொண்டிருக்க வேண்டும்.

serial data : தொடர்வரிசைத் தரவு;தொடர் நிலைத் தரவு : ஒரே சமயத்தில் ஒரு துண்மியாக வரிசை முறையில் அனுப்பப்படும் தரவு.

serial infrared : நேரியல் அகச் சிவப்பு : ஒர் அகச்சிவப்பு ஒளிக் கற்றையைப் பயன்படுத்தி, ஒரு மீட்டர் இடைவெளியில் உள்ள இரு சாதனங்களுக்கிடையே தரவுகளை அனுப்பிக் கொள்ள, ஹீவ்லெட்-பேக்கார்டு நிறுவனம் உருவாக்கிய ஒரு வழிமுறை. அனுப்பும், பெறும் சாதனங்களில் இருக்கும் துறைகள் (ports) ஒரு சீராக்கப் பட்டிருக்க வேண்டும் (aligned). இத்தகு அகச்சிவப்பு ஒளிக்கற்றை முறை பெரும்பாலும் மடிக்கணினிகளில், கையேட்டுக் கணினிகளில் பயன்படுத்தப்படுகின்றன. அச்சுப்பொறி போன்ற