பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

base class

133

base point


base class : அடிப்படை இனக்குழு : பொருள்நோக்கு நிரலாக்கத்தில் இனக்குழு அமைப்பில் பொதுவான அமைப்பு. இந்த அடிப்படை இனக்குழுவின்மீது தருவிக்கப்பட்ட இனக் குழுக்கள் (Derived classes) உருவாக்கப்படுகின்றன. பணியாளர், கண்காணிப்பாளர், மேலாளர், இயக்குநர், மேலாண் இயக்குநர் இந்த இனக்குழுப் படிநிலையில் 'பணியாளர்' என்பது அடிப்படை இனக் குழுவாகும்.

base concept data : தரவுத் தளக் கருத்துரு.

base data : தரவுத் தளம்; தகவல் தளம்.

base/displacement : அடிப்படை/இடமாற்றம் : நினைவகத்தின் குறித்த இடத்தில் இருந்து நிரல்களை இயக்கும் தொழில்நுட்பம். எந்திர மொழி நிரல்களில் உள்ள முகவரிகள் ஆரம்பத்தில் இருந்ததை நோக்கி இடம் மாறிய முகவரிகள். நிரல் இயக்கப்படும்போது மாறிய முகவரியை வன்பொருளானது அடிப் படை முகவரிக்கு அளித்து முழு முகவரியைப் பெற்றுத் தரும்.

based system knowledge : அறிவு வழி அமைப்பு.

baseline : அடிப்படைக்கோடு : சிறிய எழுத்தின் அடிப் பகுதிகள் வரிசைப்படுத்தப்படும் குறுக்கு வட்டக்கோடு.

baseline document : ஆதார ஆவணம் : தரவு செயலாக்க அமைப்பில் ஒரு தரவுவை மாற்றம் செய்வதற்குத் தேவைப்படும் ஒரு குறிப்புதவி ஆவணம்.

Base Management System, Data : தரவுத் தள மேலாண்மை அமைப்பு : சுருக்கமாக டிபிஎம்எஸ் (DBMS) எனக் குறிப்பிடுவர். டிபேஸ், ஃபாக்ஸ் புரோ போன்ற மென்பொருள்களை இந்த வகையில் அடக்குவர்.

base memory : அடிப்படை நினைவகம் : ஒரு கணினியில் இயங்கும் டாஸ் நிரல்களுக்குக் கிடைக்கும் முதல் 640 கிலோ எண்மி (பைட்) நினைவகம்.

base name : அடிப்படைப் பெயர் : புள்ளியால் பிரிக்கப்படுவதற்கு இடப்புறம் உள்ள கோப்புப் பெயரின் பகுதி. எட்டு எழுத்துகள் வரை நீளம் இருக்கும். ஒரு கோப்பின் முதல் பெயர் எனவும் சொல்லலாம்.

base number : அடிப்படை எண்

base notation : அடிப்படை குறிமானம்.

base point : அடிப்படை எழுத்து வடிவம்;அடிப்படைப் புள்ளி : எண் முறையின் ஆரம்ப நிலை.