பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1353

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

software encryption

1352

software integrated


software encryption : மென் பொருள் பூட்டுவிசை;மென் பொருள் இரகசியக் குறியீடு;மென்பொருள் மறையீடு : கணினியாக்கம் செய்யப்பட்ட தரவு களை, வன்பொருள் சாதனங்கள் மூலம் அல்லாமல், செயல்முறைப்படுத்தும் உத்திகள் மூலம் குறியீடாக்கவோ மறைவிடுப்பு செய்யவோ செய்தல்.

software engineering : மென் பொருள் பொறியியல் : உற்பத்தி உரு மாதிரிக் கணினிகளின் அடிப்படையில் பேரளவு மென் பொருள் பொறிய மைவுகளை உருவாக்கிச் செயற்படுத்து வதைக் குறிக்கும் சொல். இச் சொல்லை நேட்டோ அறிவியல் குழுவின் கணினி அறிவியல் ஆய்வுக் குழுமம் 1967 இல் உருவாக்கியது. கட்டுப்படுத்திய வடிவமைப்புகள், உயர்தரக் கணினி மென்பொருள்களை உருவாக்குதல், இயக்கமுறை முறைமைகளை வகுத்தல் போன்ற பல்வேறு தொழில் நுட்பங்கள் இதில் உள்ளடங்கும்.

software error controi : மென் பொருள் பிழைக் கட்டுப்பாடு.

software flexibility : மென் பொருள் நெகிழ்வுத் தன்மை.

software handshake : மென் பொருள் கைகுலுக்கல் : பொதுவாக தரவுகள் ஒரு தடத்திலும் கட்டுப்பாட்டுச் சமிக்கைகள் தனித் தடத்திலும் அனுப்பி வைக்கப்படுவதுண்டு. அப்படி யில்லாமல் இரண்டு இணக்கிகளுக்கிடையே தொலைபேசி இணைப்பு வழியே நடைபெறும் தகவல் தொடர்பில் இருப்பதுபோலத் தகவல்கள் அனுப்பப்படும் அதே இணைப்புக் கம்பிகள் வழி யாகவே கட்டுப்பாட்டுச் சமிக்கைகளையும் அனுப்பி வைத்தல்.

software house : மென் பொருள் இல்லம்;மென்பொருளகம் : பொது மென்பொருள் தொகுதிகள், குறிப்பிட்ட மென்பொருள் தொகுதிகள் இரண்டையும் கணினிப் பொறியமைவு உரிமையாளர்களுக்கு விற்பனைக்கு வழங்கும் நிறுமம்.

software installation engineer : மென்பொருள் நிறுவு பொறியாளர்.

software, integrated : ஒருங்கினை மென்பொருள்.

software integrated circuit : மென்பொருள் ஒருங்கிணைவு மின்சுற்று : சுருக்கமாக மென் பொருள் ஐசி என்றழைக்கப் படுவதுண்டு. ஒர் ஒருங் கிணைவு மின்சுற்று (ஐசி) ஒரு தருக்கப் பலகையில் பொருந்துமாறு வடிவமைக்கப்படுவது