பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1358

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

1357


செயல்படுத்துகின்ற,ஐபிஎம் மின் மொழிசாராக் கட்டுமானம்.

SONET:சோநெட்:ஒத்திசை ஒளிவப் பிணையம் என்று பொருள்படும் Synchronous Optical Network என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். அதிவேகத் தகவல் பரிமாற்றத்துக்கு(51.8:1 எம்பிபீஎஸ் முதல் 2.48 ஜிபிபீஎஸ் வரை)வழி வகுக்கும் இழைஒளித் தகவல் தொடர்பு தர வரையறைகளின் ஒரு வகைப்பாடு.

.son file:மகவுக் கோப்பு.

SOP:எஸ்ஓபி:சொந்தச் செயற்பாட்டு நடைமுறை என்று பொருள்படும் Standard Operating Procedure என்பத்ன் தலைப்பெழுத்துக் குறும்பெயர்.

sort:பிரிப்பு:பிரி;வரிசைப் படுத்தல்;இணக்கப்படுத்து:வகைப்படுத்து: 1.பதிவேடுகளை ஒரு தருக்கமுறைப்படி அமைத்தல்.ஒரு கணினியில், காந்த வட்டுகளை அல்லது நாடாக்களைப் பயன்படுத்திப் பெரும்பாலும் பிரிப்பு செய்யப்படுகிறது. 2.வட்டில் அல்லது நாடாவிலுள்ள பதிவேடுகளைப் பிரித்தமைக்கிற பயன்பாட்டுச் செயல்முறை.

sort algorithm:வகைப்பாட்டு எண்மானம்;வரிசைநெறிமுறை: தகவல்களை ஒரு புதிய வரிசை முறையில் மறுபடியும் ஒழுங்கு படுத்துவதற்கான சூத்திரம்.

sort effort:பிரிப்பு முயற்சி;வரிசைப்படுத்தும் முயற்சி:ஒழுங்கற்ற பட்டியலை ஒழுங்கு படுத்துவதற்குத் தேவைப்படும் நிறுத்தங்களின் எண்ணிக்கை.

sorter:பிரிப்பி;வகைப்படுத்தி;வரிசையாக்கி.

sort generator:பிரிப்பி உருவாக்கி;வகைப்படுத்தல் உருவாக்கி; வரிசையாக்கி:ஒட்டத்தை உண்டாக்குவதற்கான ஒரு பிரிப்புச் செயல்முறையை உருவாக்குகிற செயல்முறை.

sorting:பிரித்தல்;பிரிப்பி;வரிசைப்படுத்தி:முன்பே தெரிந்தெடுத்த வரிசை முறைப்படி ஒர் அட்டைப் பதிவேடுகளின் தொகுதியைப் பிரித்தமைக்கும் சாதனம.

sort key:வகைப்பாட்டு விசை:கோப்பின் வரிசைமுறையினைக் கட்டுப்படுத்துகிற,ஒரு பதிவேட்டிலுள்ள புலம் அல்லது புலங்கள்.

sort/merge:வரிசையாக்கு/ஒன்று சேர்ப்புநிரல்.

sort/merge programme:பிரி/சேர் நிரல் தொடர்;வரிசை படுத்து/சேர்ப்பு நிகழ்வு:வரையறுக்கப்