பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1378

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

statement, arithernetic

1377

static electricity


வேற்றப்படக்கூடிய மிகச்ச சிறிய சொல்தொடர். ஆணை என்றும் அறியப் படும்.

statement, arithemetic : கணக்கீட்டுக் கூற்று.

statement, control : கட்டுப்பாட்டுக் கூற்று.

statement label : சிட்டைக்கூற்று;அறிக்கை அடையாளம் : மூலமொழி நிரல் தொடரில் உள்ள சொற்றொடரின் வரி எண்.

state-of-the-art : கலையின் நிலை : மிக அண்மைய தரவுத் தொழில் நுட்பம் தொடர்பான புதிய தொழில் நுட்பங்களை உள்ளடக்கியதென்பதைக் குறிக்கும் மரபுத் தொடர்.

. state. us : ஸ்டேட். யுஸ் : ஓர் இணைய தள முகவரி அமெரிக்க நாட்டு மாநிலஅரசைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

static : நிலையான;மாறாத : நகராத அல்லது முன்னேறாத, நிலைத்த, ஒய்வில் உள்ள.

static allocation : நிலைத்த ஒதுக்கீடு : ஒருமுறை நடந்தேறும் நினைவக ஒதுக்கீடு. பெரும்பாலும் நிரல் தொடங்கும்போது செய்யப்படும். நிரல் செயல்பட்டு முடியும்வரை ஒதுக்கப் பட்ட நினைவகம் விடுவிக்கப் படாமலே கட்டுண்டிருக்கும்.

static analysis : நிலை ஆய்வு;நிலை பகுப்பாய்வு : செயல் படுத்தா மலேயே ஒரு நிரல் தொடரை ஆராய்தல்.

static binding : நிலைத்த பிணைப்பு : நிரலை மொழி மாற்றும்போது (compiling) அல்லது தொடுப்புறுத்தும்போது (linkage) நிகழ்வது. நிரலிலுள்ள குறியீட்டு முகவரிகளை சேமிப்பிடஞ் சார்ந்த முகவரிகளாய் மாற்றி யமைத்தல்.

static column memory : நிலைப்பத்தி நினைவகம் : நினைவகத் துண்மி களை அணுகுவதற்கு மின்னணுத் துடிப்பு குறைவாகத் தேவைப்படும் ஒருவகைப் பக்கமுறை நினைவகம்.

static dump : நிலை திணிப்பு : எந்திர ஒட்டத்தில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில்-பெரும்பாலும் ஒட்டம் முடியும்போது-செய்யப் படும் சேமிப்பு திணிப்பு.

static electricity : நிலை மின் விசை : குறைந்த ஈரப்பதச் சூழல்களில் வேண்டுமென்றே மின்னேற்றம் செய்தல் அல்லது உராய்தல் காரணமாக உண்டாகும் நிலையான மின்னேற்றம்.