பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1383

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

stick model

1382

stock-screening


பணிகளாக எந்திரம் செய்ய வேண்டியவை நான்கு பணிகள் என்று சார்லஸ் பாபேஜ் கூறினார். அவை கணக்கிடும் அலகு, நினைவகம், கணிக்கப் படும் வரிசையில் தானியங்கி வாய்ப்பு மற்றும் உள்ளீடு-வெளியீடு. 1946இல் பெல் தொலைபேசி ஆய்வகத்தில் ஆராய்ச்சிக் கணித அறிஞராக இருந்த ஜார்ஜ் ஸ்டீபிட்ஸ் என்பவர் பாபேஜின் எண்ணங்களை உள்ளடக்கிய பல தொடர் கணிப்பிகளை வடிவமைத்தார்.

stick model : குச்சி முன் மாதிரி : கோடுகள் அல்லது வெக்டர் (நெறியம்) களால் ஆன படம். சான்றாக, உயிர் மருத்துவப் பயன்பாடுகளின் ஒரு நபர் அல்லது விலங்கின் உறுப்புகளைக் கோடு களாக மாற்றி அதன் இயக்கத்தை ஒளி வடிவில் கவனித்து வரைபடமாக அமைத்து ஆராய்தல்.

Sticky Keys : நிலைத்த விசைகள் : தொடர்ந்து பல விசைகளை ஒருசேர அழுத்துவதைத் தவிர்க்க, நகர்வு (shift), கட்டுப்பாடு (control), மாற்று (Alt) விசைகளை அழுத்தியபின் அப்படியே நிலைத்திருக்கச் செய்யும்முறை. பயனாளர் ஒரு விசையை அழுத்திப்பிடித்தவாறே இன்னொரு விசையை அழுத்த வேண்டியிருப்பதை இந்த மாற்று விசைகள் தவிர்க்கின்றன. முதலில் மெக்கின்டோஷில் அறிமுகப்படுத்தப்பட்டுப் பிறகு டாஸ், விண்டோஸிலும் இவ்வசதி தரப்பட்டுள்ளது.

stochastic : குறிப்பிலா;ஏதேச்சையான : குறிப்பின்றி நிகழும் நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டது. எடுத்துக்காட்டாக, குறிப்பிலா மாதிரியம் என்பது, ஏதேச்சையாக நிகழும் நிகழ்வுகளையும், திட்டமிட்ட நிகழ்வுகளையும் கடைக்கில் எடுத்துக் கொள்கிறது.

stochastic procedures : வாய்ப்பியல் நடைமுறைகள் : அல்காரிதமிக் நடைமுறை களுக்குப் பதிலாக செய்து பார்த்து பிழை நீக்கும் முறை.

stochastic process : வாய்ப்பியல் செயல்முறை : நிகழ்வுக் கொள்கையால் மட்டுமின்றி வேறெந்த வகையிலும் துல்லியமாக விளக்க முடியாத காலம் அல்லது இடத்தினால் உருவாக்கப்பட்ட நிகழ்ச்சி களைக் குறிக்கும் செயல்முறை.

stock : இருப்பு.

stock-screening package : ஏராளமான பொருளாதார தகவல்களை அலசி ஒரு குறிப்பிட்ட நபரின் விருப்பத்திற்கேற்ப