பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1385

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
storage, core
storage protection
1384

storage, core : உள்ளகச் சேமிப்பு.

storage, data : தரவு சேமிப்பகம்.

storage density : சேமிப்பக அடர்த்தி.

storage device : சேமிப்பகச் சாதன;சேமிப்புச் சாதனம் : கணினி அமைப்புக்குள் தரவுகளை சேமிக்கப் பயன்படும் சாதனம். ஒருங்கிணைந்த மின் சுற்று சேமிப்பகம், காந்த வட்டு அலகு, காந்த நாடா அலகு, காந்த உருளை அலகு, நெகிழ் வட்டு மற்றும் நாடாப்பெட்டி போன்றவை இவ்வகையில் சேரும்.

storage : வட்டு சேமிப்பகம்.

storage dump : சேமிப்பகத் திணிப்பு : ஒரு கணினியின் உள்ளக சேமிப்பகத்தின் உள்ளடக்கங்களில் பகுதி அல்லது முழு அச்சு வெளியீடு. பிழைகளைக் கண்டறியப் பயன் படுகிறது. நினைவகக் கொட்டல் (Memory Dump) என்றும் அழைக்கப்படுகிறது.

storage, fast-access : விரைவணுகு சேமிப்பகம்.

storage, internal : அகச்சேமிப்பு.

storage key : சேமிப்பக விசை;தேக்ககச் சாவி : சேமிப்பகக் கட்டம் அல்லது தொகுதிகளுடன் தொடர்புள்ள காட்டி. பொருத்தமான பாதுகாப்பு விசை அல்லது கட்டங்களைப் பயன்படுத்தினால் மட்டுமே பணிகள் செய்யமுடியும் என்பதே நியதி.

storage location : சேமிப்பக இருப்பிடம்; தேக்கக அமைவிடம் : எழுத்து துண்மி அல்லது சொல் சேமிக்கப்படும் சேமிப்பகத்தின் இடம்.

storage map : சேமிப்பக வரைபடம் : கணினி அமைப்புகளின் சேமிப்பக அலகுகளில் நிரல் தொடர்களும் தரவுகளும் எங்கே சேமிக்கப் படுகின்றன என்பதைக் காட்டும் வரைபடம்.

storage media : சேமிப்பக ஊடகம் : வட்டுகள், நாடாக்கள் மற்றும் குமிழ் நினைவு பெட்டிகளைக் குறிக்கிறது.

storage pool : சேமிப்பகத் தொகுப்பு : வட்டு இயக்கிகள் போன்ற சேமிப்பகச் சாதனங்களைக் கணினி அமைப்புகளில் பொதுவாக வட்டுத் தொகுப்பு என்று அழைக்கப்படுகிறது.

storage protection : சேமிப்பகப் பாதுகாப்பு : சேமிப்பகச் சாதனங்களில் சில பகுதிகள் அல்லது முழுவதிலும் இருந்து அனுமதி பெறாமல் எழுதவோ அல்லது படிக்கவோ செய்வதற்கு