பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1411

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

synchronous

1410

synchronous UART


 படை இயக்கத்தின் செயல் ஆகியவற்றைத் துவங்கவும், அவற்றின் அடுத்த நிலைக்குப் போகவும் ஒரு நேரம் காட்டும் கடிகாரத்தின் சமிக்கைகளை ஒட்டி நடைபெறுவதைக் குறிப்பிடுகிறது.

synchronous communication : ஒரே நேரத்திய தரவுத் தொடர்புகள்; ஒத்தியக்கச் செய்தித் தொடர்பு : கணினிகளுக்கிடையில் மிக அதிகவேகத்தில் தரவுகளைப் பரிமாறிக்கொள்ளும் முறைகள். கவனமாக நேரம் அமைத்தலும், சிறப்பு கட்டுப்பாட்டுக் குறியீடுகளும் இதில் தேவை.

syncrhronous computer : ஒரே நேர கணினி; ஒத்தியியக்கக் கணினி : ஒரு கடிகாரம் உருவாக்கும் சமிக்கையின் விளைவாக இயக்கம் துவக்கப்படும் கணினி.

synchronous DRAM : ஒத்திசைவு டிரேம் : இயங்குநிலை குறிப்பிலா அணுகு நினைவகத்தின் (Dynamic Random Access Memory) ஒருவகை. வழக்கமான டி'-ரேம் நினைவகத்தைவிட உயர்கடிகார வேகத்தில் செயல்படக்கூடியது. ஒருவகை வெடிப்பு நுட்பத்தின் மூலம், அடுத்து அணுகவிருக்கும் நினைவக இருப்பிடத்தை முன்னறிந்து செயல்படும் திறன் படைத்தது.

synchronous network : ஒரே நேரத்திய கட்டமைப்பு ; ஒத்தியக்கப் பிணையம் : ஒரு பொது கடிகாரத்தின் துடிப்புக்கேற்ப ஒரே நேரத்தில் தகவல் தொடர்பு வழித்தடங்கள் செயல்படும் பிணையம்.

synchronous operation : ஒரே நேரத்திய இயக்கம்; ஒத்தியக்கச் செயல்பாடு : கடிகாரத் துடிப்புகளின் கட்டுப்பாட்டின்கீழ் இயங்கும் ஒரு கணினி அமைப்பு.

synchronous protocol : ஒத்தியக்க வரைமுறை : பைசிங்க், எஸ்டிஎல்சி, எச்டிஎல்சி போன்ற ஒத்தியக்க செலுத்தியைக் கட்டுப்படுத்தும் தகவல் தொடர்பு வரைமுறை.

synchronous transmission : ஒரேநேரத்தில் தரவு அனுப்புதல்; ஒத்தியக்கச் செலுத்தம் : ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் துண்மிகள் அனுப்பப்படும் முறை. நேர ஒருங்கிணைப்புக்கு ஒரே கடிகார சமிக்கைகளையே பயன்படுத்தி அனுப்புதலும், பெறுதலும் செய்தல்.

synchronous UART : ஒத்திசைவு யுஏஆர்டீ : யுஏஆர்டீ என்பது உலகப் பொதுவான ஒத்திசையா வாங்கி / அனுப்பி (Universal Asynchronous Receiver/ Transmitter) என்பதைக் குறிக்