பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1421

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

system security

1420

system specifications




மெக்கின்டோஷில் முறைமைக் கோப்பில் சேமிக்கப்பட்டுள்ள பற்பல நிரல்கூறுகள், வரையறுப்புகள், தகவல் துணுக்குகள் இவ்வாறு அழைக்கப்படுகின்றன. மிதவைப்புள்ளிக் கணக்கீட்டு நிரல் கூறுகள், எழுத்துரு வரையறைகள், புறச்சாதன இயக்கிகள் இவற்றுள் அடங்கும்.

system security : அமைப்பு பாதுகாப்பு : ஒரு நிறுவனம் மற்றும் அதன் வாடிக்கையாளர்களின் பதிவேடுகளின் இரகசியத்தைப் பாதுகாக்கப் பயன்படுத்தப்படும் வன்பொருள் மற்றும் மென்பொருளின் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளும், மேலாண்மை நடைமுறைகளும்.

systems management : அமைப்பு மேலாண்மை : அமைப்பு உருவாக்கல் மேலாண்மை. இதில் அமைப்பு ஆய்வு மற்றும் வடிவமைப்பு, பயன்பாட்டு மேம்பாடு மற்றும் அமலாக்கம் ஆகியவை உள்ளன.

system software : அமைப்பு மென் பொருள் : ஒரு கணினி அமைப்பின் இயக்கங்களுக்கு உதவி, கட்டுப்படுத்தும் நிரல் தொடர்கள். அமைப்பு மென் பொருள் என்பது செயலாக்க அமைப்பு போன்ற பலதரப் பட்ட நிரல்தொடர்களைக் குறிப்பது. தரவுத் தள மேலாண்மை அமைப்பு, தகவல் தொடர்பு கட்டுப்பாடு நிரல் தொடர்கள், சேவை மற்றும் பயன்பாடு நிரல் தொடர்கள் மற்றும் நிரல் தொடர் மொழி பெயர்ப்பிகள் ஆகியவை இவ்வகையில் சேரும்.

system software packages : அமைப்பு மென்பொருள் தொகுப்பு : கணினியை இயக்கி, கட்டுப்படுத்தி அதன் செயலாக்கத் திறன்களை அதிகரிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட சிக்கலான நிரல் தொடர்களின் தொகுதி.

systems solution methodology : அமைப்பு தீர்வு வழிமுறை : சிக்கல் தீர்வுக்கான அமைப்பு அணுகுமுறை. உண்மை வணிக சூழ்நிலைகள், மாதிரி ஆய்வுகளுக்காக இதை வழிமுறையாக மாற்றிச் சொல்லப்படுகிறது.

system specifications : அமைப்பு விளக்கக் குறிப்புகள் : அமைப்பு வடிவமைப்பு நிலையின் உற்பத்திப் பொருள். வன்பொருள், மென்பொருள், வசதிகள், ஆட்கள், தரவுத் தளம் மற்றும் திட்டமிடப்பட்ட தரவு அமைப்பின் பயனாளர் இடைமுகம் ஆகியவற்றைப் பற்றிய விளக்கக் குறிப்புகளை இது கொண்டுள்ளது.