பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1506

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

unpopulated board

1505

unzip



unpopulated board : பெருக்கப் படாத அட்டை : வாங்குபவரால் கொடுக்கப்படக்கூடிய மின் சுற்று அட்டை.

unread : படிக்கப்படாத : 1. ஒரு செய்திக்குழுவில் பயனாளர் ஒருவர் இதுவரை வாசித்திராத கட்டுரை. செய்தி வாசிப்புக்கிளையன் நிரல், பயனாளரால் படிக்கப்பட்ட, படிக்கப்படாத கட்டுரைகளுக்கிடையே வேறு பாடு கண்டு, அவர் இதுவரை படித்திராத கட்டுரைகளை மட்டுமே வழங்கனிலிருந்து பதிவிறக்கம் செய்து தரும். 2. பயனாளருக்குக் கிடைக்கப்பெற்ற மின்னஞ்சல், ஆனால் மின்னஞ்சல் நிரல் மூலமாக இன்னும் திறந்து படிக்கப்படாதது.

unrecoverable error : திருத்த முடியாப் பிழை; மீட்க முடியாப் பிழை : ஒரு நிரலில் ஏற்படும் பிழை. சரிசெய்ய முடியாத நிலையில் இருத்தல். கணினிச் செயல்பாட்டில் ஏற்படும் பிழை நிலையையும் குறிக்கும். புற நிலைமீட்பு நுட்பத்தின் மூலமே சரி செய்ய முடிகிற அழிவு செய் பிழை.

unsent message : அனுப்பாச் செய்தி.

unset : தனியாக்கு : ஒரு துண்மியின் அல்லது துண்மிகளின் தொகுதியின் மதிப்பை இருமை '0' ஆக மாற்றுதல்.


unshielded cable : உறையிடா வடம் : உலோக உறையிடப்படாத வடம். இதுபோன்ற வடங்களில் உள்ள கம்பியிணைகள் பெரும்பாலும் முறுக்கப்பட்டிருக்கும். அவ்வாறு முறுக்கப்படவில்லையெனில் புறநிலை மின்காந்தப் புலங்களினால் இடையூறு ஏற்படும். இதன் காரணமாகவே, உறையிடா வடங்கள் குறைந்த தூரத் தரவு தொடர்புக்கே பயன்படுத்தப்படுகின்றன.

unsigned : அடையாளமற்ற.

unsubscribe : சந்தா நீக்கு : 1. ஒருவர் ஏற்கெனவே சந்தாதாரராக உள்ள ஒரு செய்திக் குழுவின் பெயரைப் பட்டியலிலிருந்து (செய்திவாசிப்பு கிளையன் நிரல் மூலம்) நீக்கி விடுதல். 2. ஒர் அஞ்சல் பட்டியலில் குறிப்பிட்ட மின்னஞ்சல் முகவரியை நீக்கிவிடல்.

untar : அன்டார் : யூனிக்ஸ் இயக்கமுறையில் இருக்கும் ஒரு பயன்கூறு. யூனிக்ஸின் டார் (tar) நிரல்மூலம் ஒன்று சேர்க்கப்பட்ட காப்பகக் கோப்பிலிருந்து தனித்தனிக் கோப்புகளாகப் பிரித்தெடுத்தல்.

unzip : அன்ஸிப் : gzip, pkzip மூலம் இறுக்கிச் சுருக்கப்பட்ட

95