பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1507

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

up

1506

upper memory area



காப்பகக் கோப்பினை விரித்துப் பெருக்கும் கட்டளை.

սp : மேலே : இயங்கிக் கொண்டிருக்கின்ற கணினி அமைப்பின் நிலை.

up-and-running : மேலேற்றி ஒட்டுதல்; மேலேயும், ஓடுவதும் : சரியாக இயங்கும் ஒரு கணினியைக் குறிப்பிட இச்சொல் பயன்படுத்தப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட காலம் வேலை செய்யாமல் இருந்து இப்போது நன்றாக இயங்குகிறது என்பதைக் குறிப்பிடுகிறது.

up arrow : மேல் அம்புக்குறி.

update : இற்றைப்படுத்தல்; புதுப்பித்தல்; நிகழ்நிலைப் படுத்து; திருத்து; புதுநிலை : தரவுகளை மாற்றியோ அல்லது நீக்கியோ தரவுக் கோப்புகளை நடப்பில் உள்ளதாக ஆக்கல்.

updated driver : புதுப்பித்த இயக்கி.

updating and file maintenance : புதுப்பித்தலும் கோப்பு பராமரித்தலும்.

upgrade : மேம்படுத்து : ஒரு கணினி அமைப்பு போன்றவற்றின் கணிப்புத் திறனை அதிகரிக்க அதை மாற்றி அமைப்பது.

upgrade processor : செயலி மேம்படுத்து.

upgrade, socket : பொருத்துவாய் மேம்படுத்து.

uplink : மேலிணை : தரை நிலையத்திலிருந்து செயற்கைக் கோளுக்கான தரவுத் தொடர்பு வழித்தடம்.

upload : மேலேற்று : ஒரு பயன் படுத்துபவரின் அமைப்பில் இருந்து தொலைவில் உள்ள கணினி அமைப்புக்குத் தரவுகளை மாற்றுவது.

upper case : பெரிய எழுத்து : ஆங்கில எழுத்துகளில் இருக்கும் அமைப்பு முறை. a என்பது சிறிய எழுத்து (Lower Casee) A என்பது பெரிய எழுத்து (Upper Case).

upper memory area : நினைவக மேற்பகுதி : வழக்கமான நினைவகமான 640 கே. வுக்கு அருகில் உள்ள 384கே. முகவரியிடம் இதை மொத்த நினைவகத்தின் ஒரு பகுதியாகக் கொள்வதில்லை. ஏனென்றால், இப்பகுதி பயன்பாடுகள் தங்களது தகவலை சேமிக்கமுடியாது. இப்பகுதி காட்சித்திரை போன்ற கணினியின் வன்பொருளுக்காக ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது. 386இன் மேம்பட்டமுறையில் விண்டோஸ் இப்பகுதியில் பயன்படுத்தப்படாத இடங்களை அணுக முடியும்.