பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1525

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ventura publisher

1524

VERONICA


பல்கலைக் கழக தருக்கவியல் அறிஞர் திரு. ஜான்வென் (1834-1923) அவர்களின் பெயரில் வழங்கப்படுகிறது.

ventura publisher : வெஞ்சுரா பதிப்பாளர் : பீசி. மற்றும் மெக் கின்டோஷ்களுக்கான டி. டீபி நிரல் தொடர். ஜெராக்ஸ் நிறுவனமான வெஞ்சுரா மென்பொருள் நிறுவனம் உருவாக்கியது. பெரிய ஆவணங்களுக்கு முழுஅளவு பக்க அமைப்பு தருகிறது. மற்ற வரைகலை சொல் செயலாக்க நிரல் தொடர்களில் உருவாக்கப்பட்ட தரவுகளை ஏற்பது டாஸ் பதிப்பில் ஜெம் (GEM) இடைமுகத்தில் வெஞ்சுரா வருகிறது.

verbose : நீள்விளக்கம்; நீள் செய்தி : மிகச் சுருக்கமான குறி முறையில் தெரிவிப்பதற்குப் பதிலாக மிக நீண்ட, ஆங்கில உரைநடையை யாத்த செய்திகளைத் திரையிடல்.

verification : சரிபார்த்தல்.

verifier : சரிபார்ப்புச் சாதனம்; சரிபார்ப்பி : விரற்கட்டைத் துளையிடுவதில் ஏற்படும் தவறுகளைக் கண்டுபிடிக்கப் பயன்படும் சாதனம்.

verifier, automatic : தானியங்குச் சரிபார்ப்பி.

verifier, card : அட்டைச் சரிபார்ப்பி.

verifier, key : விசைச் சரிபார்ப்பி.

verifier, paper tap : தாள்நாடா சரி பார்ப்பி.

verify : சரிபார் : 1. ஒரு தரவு செய்முறைபடுத்தும் செயற்பாடு துல்லியமாக நிறைவேற்றப்பட்டிருக்கிறதா என்று கண்டுபிடித்தல். 2. தரவுவின் நேர்மைத் தரவினைச் சரிபார்த்தல்.

VERONICA : வெரோனிக்கா : மிகஎளிதில் தேடிக் காணக் கூடிய, கணினி ஆவணக் காப்பகங்களின் வரிசைமுறைப் பட்டியல் என்று பொருள்படும் Very Easy Rodent Oriented Netwide Index To Computerized Archives archip என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். நெவேடா பல்கலைக் கழகத்தில் உருவாக்கப்பட்ட இணைய சேவை. திறவுச்சொற்கள் அடிப்படையில் கோஃபர் காப்பகங்களைத் தேடிக் கண்டறியும். பயனாளர்கள் தேடலை விரிவாக்கவோ, குறுக்கவோ And, Or, போன்ற தருக்கச் சொற்களைப் பயன்படுத்திக்கொள்ள முடியும். தேடிய தரவு கிடைக்கப்பெறின், ஒரு புதிய கோஃபர் பட்டியலை உருவாக்கித் தரும்.