பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1550

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

voice grade

1549

voice output


200 முதல் 1, 000 ஹெர்ட்சுகளாகவும், ஆண்களுக்கு 100 முதல் 500 ஆகவும் இருக்கும்.

voice grade : குரல் தரம் : வழக்கமான தொலைக்காட்சி இணைப்புகளில் பயன்படுத்தப் படும் கம்பிகளை கணினி இணைப்புகளுக்குப் பயன்படுத்துதல். பெரும்பாலான தொலைத் தொடர்புகளுக்கு இது இன்றியமையாதது. இது 300 முதல் 3, 000 வரையிலான அலைவரிசைகளில் தரவுகளை 9, 600 இணைப்புகளில் அனுப்ப அனு மதிக்கிறது. இது, அகல் இணைப்பு, குறு இணைப்பு என்பவற்றிலிருந்து வேறுபட்டது.

voice-grade channel : குரல் தரத் தடம் : ஒரு தொலைபேசி இணைப்பைப் போன்ற தகவல் தொடர்புத் தடம். 300-3000 ஹெர்ட்ஸ் கேட்பொலி அலைக்கற்றை கொண்ட, குரல் தரவுவை அனுப்புவதற்கு ஏற்றது. வினாடிக்கு 33 கிலோபிட் வரை தொலைநகல், தொடர்முறை, இலக்கமுறைத் தரவுகளை அனுப்பிட ஒரு குரல்-தரத் தடத்தைப் பயன்படுத்திக் கொள்ளமுடியும்.

voice input : குரல் உட்பாடு;குரல் உள்ளீடு; பேச்சாணை;குரலாணை : ஒரு கணினியில் மனிதக் குரலை உட்பாடாகப் பயன்படுத்த அனுமதிக்கும் உட்பாட்டுச் சாதனம்.

voice mail : குரல் அஞ்சல்;பேச்சு அஞ்சல் : தொலைபேசியில் பேசப்படும் செய்தி கள், இலக்க வடிவில் மாற்றப்பட்டு, கணினியின் நினைவகத்தில் சேமித்து வைக்கப்படுகின்றன. செய்திகள் வரவழைக்கப்படும்போது, அவை மீண்டும் குரல் வடிவுக்கு மாற்றப்படும்.

voice messaging : குரல் செய்தியளித்தல் : மின்னணு அஞ்சலுக்கு மாற்றாக குரல் அஞ்சலைப் பயன்படுத்தல். பெறுபவர் இல்லை என்பதற்காக அல்லாமல் குரல் செய்திகள் வேண்டுமென்றே பதிவு செய்யப்படுகிறது.

voice-net : குரல் பிணையம் : இணையத்தில் நடைபெறும் தொலைபேசி வழியான தரவு பரிமாற்றத்தைக் குறிக்கும் சொல்தொடர். பெரும்பாலும், மின்னஞ்சல் ஒப்பத்தின் முன்பாக இடம்பெறுவது.

voice output : குரல் வெளிப்பாடு : கணினி, பேசும் மொழி மூலம் வெளிப்பாட்டினை வழங்க அனுமதிக்கிற ஒலி மறுமொழிச் சாதனம். இது