பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

blank squash

163

bloatware


blank squash : வெற்றிட நீக்கம் : தகவல் பொருள்களுக்கிடையில் வெற்றிடங்களை நீக்குதல். சான்றாக, City + ", " + STATE என்றும் Austin TX என்றும் வருவதை விட AUSTIN, TX என்று வந்து வெற்றிடம் நீக்கப்பட்டிருக்கும்.

bleed : சொட்டுதல் : டிடீ. பீ. மற்றும் வணிக அச்சில் பயன் படுத்தப்படும் சொல். பக்கத்தின் இறுதிப் பகுதியில் இருந்து வெளியே போவதைக் குறிப்பிடுகிறது.

blickering : பளிச்சிடுதல்.

blind carbon copy : அறியா நகல். காண்க : bcc

blind search : கண்மூடித் தேடல் : ஒரு முறையான திட்டமின்றித் தேடல். அதிகநேரம் எடுக்கும் தேடல். இதில் எல்லா வாய்ப்புகளும் முயற்சிக்கப்படும். ஆனால் புத்திசாலித்தனம் இருக்காது.

blinking : சிமிட்டல்; இமைத்தல் : வடிவமைப்பவரின் கவனத்தைக் கவர திரையில் தோன்றித் தோன்றி மறையும் ஒரு வரை படத் தோற்றம்.

blink speed : மின்னும் வேகம்; துடிக்கும் வேகம் : கணினி இயங்கிக் கொண்டிருக்கும்போது, ஒரு பயன்பாட்டுத் தொகுப்பைத் திறந்தவுடன், எடுத்துக்காட்டாக, ஒரு சொல்செயலியைத் திறந்தவுடன், திரையில் நாம் தகவலைத் தட்டச்சுச் செய்ய வசதியாக ஒரு குறிப்பிட்ட இடத்தில் சுட்டுக்குறி (cursor) துடித்துக் கொண்டிருக்கும். சுட்டுக் குறி மின்னுகின்ற, துடிக் கின்ற வேகத்தைக் குறிக்கும் சொல் இது.

blip : திரைத் தோற்றம் : ஒளிக் காட்சி திரையில் உள்ள ஒரு சிறிய பிரகாசமான தோற்றம். பொதுவாக இது ஒரு ரேடார் திரையாக இருக்கும்.

blip mark : திரைத் தோற்றக் குறியீடு : நுண் ஃபிலம் போன்ற ஒரு ஊடகத்தில் காணப்படும் கோடு அல்லது புள்ளி. இதை ஒளி முறையில் கண்டறிய முடியும். நேரம் அறிய அல்லது எண்ணுவதற்குப் பயன்படுத்தப்படும்.

bloat : உப்பல்

bloatware : உப்பிய மென் பொருள் : பயனாளரின் நிலை வட்டில் இயல்புக்கு அதிகமாய் ஏராளமான இடத்தை அடைத்துக் கொண்டிருக்கும் கோப்புகளையுடைய மென்பொருள். குறிப்பாக, அதே மென்பொருளின் முந்தைய பதிப்போடு ஒப்பிடுகையில் இப்போதைய பதிப்பு ஏராளமான இடத்தை எடுத்துக் கொண்டால் இப் பெயரிட்டு அழைப்பதுண்டு.