பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

brain-wave interface

179

breadboard


செய்திக்குழு வழியாக கேட்கப்பட்ட கேள்விக்கு வந்து குவிந்த முறைப்படுத்தப்படாத ஏராளத்தகவல் குப்பை, அவற்றைப் புரிந்து கொள்வதும் பொருளறிவதும் மிகக்கடினமான செயல்.

brain-wave interface : மூளை- அலை இடைமுகம் : மனிதனின் எண்ணங்களை அறிந்து அதற்கேற்ப கணினி செயலாற்றும் திறனுடைய மென்பொருள் மற்றும் வன்பொருள்.

branch : இணை பிரிதல் : 1. சில நிபந்தனைகளின் அடிப்படையில் கட்டுப்பாட்டின் ஓட்டம் ஒன்று அல்லது பலபாதைகளில் ஒன்றினைத் தேர்ந்தெடுத்தல். 2. ஒரு நிரல்வரிசையில் இருந்து மற்றொரு நிரல் வரிசைக்குக் கட்டுப்பாட்டினை மாற்றக்கூடிய ஆணை.

branching : கிளைத்தல்; கிளை பிரித்தல்.

branching Statement : கிளைபிரிக் கூற்று ; கிளைபிரி கட்டளை.

branch Instruction : கிளை பிரிப்பு ஆணை : ஒரு நிரலில் இரண்டில் ஒரு பாதையைத் தேர்ந்தெடுப்பதற்குக் கணினிக்கு உதவும் ஆணை. நிரலை இயக்கும்போது, சூழ்நிலைக்கேற்ப பிரிந்து போதல் செயல்படுத்தப்படும்.

branch point : பிரியும் இடம் : ஒரு நிரலில் பிரிந்து போதலைத் தேர்ந்தெடுக்க வேண்டிய இடம்.

branded : முத்திரைப் பெயர்.

BRB : பிஆர்பி : நான் மீண்டும் வருவேன் என்று பொருள்படும் I'll be right back என்பதன் தலைப்பெழுத்துச் சுருக்கம். இணைய அரட்டை மற்றும் இணைய தகவல் சேவைகளில் கலந்து கொள்வோர் தற்காலிகமாக அக்குழுக்களிலிருந்து பிரியும் போது தரும் செய்தி.

bread board : சோதனைப் பலகை; பிரெட்போர்ட் : ஒரு செயல்முறைச் சாதனம் அல்லது ஒரு அமைப்பின் சோதனை முறையிலான அல்லது தற்காலிகமான மாதிரி அமைப்பு.

சோதனைப் பலகை