பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Btrieve

186

bubble jet printer


களில் தரவு இருக்கும் இடத்தைக் காட்ட ஏற்பாடு செய்யும் ஒரு வழி. இதன் மூலம் எந்த ஒரு குறிப்பிட்ட பதிவையும் உடனடியாகத் தேடி கண்டறி முடியும்.

Btrieve : பிட்ரீவ் : நாவல் (Novell) நிறுவனத்தின் தரவு தள மேலாண்மை முறைமை

BTW : பிடீடபிள்யூ : இந்த வழியே என்று பொருள் படும் By The Way என்பதன் தலைப்பெழுத்துச் சுருக்கம். இணையத்தில் மின் அஞ்சல் மற்றும் செய்திக்குழுக் கட்டுரைகளில் குறிப்புரையைச் சுட்டும் சொல் தொடராக இது அடிக்கடி பயன் படுத்தப்படுகிறது.

bubble : குமிழ் : குமிழ் வரை படத்தில் ஒரு குறியீடு அல்லது குமிழ் நினைவகத்தில் துண்மி.

bubbie chart : குமிழ் நிரல் படம் : குமிழ் போன்ற குறியீடுகளை அதிகம் பயன்படுத்தி தரவுப் பாய்வு நிரல் படங்களை உருவாக்குதல்.

bubble jet : குமிழ் ஜெட் : கேனனின் இங்க் ஜெட் அச்சுப்பொறி தொழில் நுட்பம். லேசர் அச்சுப் பொறியினைவிட மலிவானது.

bubble jet printer : குமிழி பீச்சு அச்சுப்பொறி : தொடா அச்சு முறை சார்ந்த அச்சுப் பொறி. மைபீச்சு அச்சுப்பொறியில் அமைந்துள்ளது போன்ற நுட்பமே இதிலும் பயன்படுத்தப் படுகிறது. தாளின்மீது ஊசித்துளை வழியே மை பீச்சப்பட்டு எழுத்துகள் அச்சிடப்படுகின்றன. மையைத் தயாரிக்க தனிச் சிறப்பான சூடாக்கும் கம்பிகளைக் கொண்டுள்ளது.


குமிழ் பீச்சு அச்சுப் பொறி