பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

bug

189

bulk eraser


தகவல் அனுப்பப் படும்போது, வட்டிலிருந்து தகவலைப் படிக்கும் போது, வட்டில் தகவல் எழுதப்படும் போது மற்றும் இதுபோன்று வேக வேறு பாடுள்ள இரு சாதனங்களுக்கிடையே தகவல் பரிமாற்றத்துக்கு இடைநிலை தகவல் தேக்கம் அவசியமாகும்.

bug : பிழை;தவறு : ஒரு கணினியின் நிரலிலோ அல்லது அதன் அமைப்பிலோ, அதன் வன்பொருள் பகுதியிலோ ஏற்படும் ஒரு தவறு. Debug என்றால் பிழைகளை நீக்கி கோளாறுகளை சரி செய்வதாகும்.

buggy : முற்றப் பிழையான;முழுக்கப் பிழையான : பிழைகள் மலிந்த மென்பொருளைக் குறிக்கப் பயன்படும் சொல்.

building block principle : உறுப்புத் தொகுதிக் கோட்பாடு.

built-in : உள்ளிணைக்கப்பட்ட.

built-in check : உள்ளிணைந்த சரிபார்ப்பு.

built-in font : உள்ளிணைந்த எழுததுரு.

built-in function : உள்ளிணைந்த செயற்பாடு.

built-in groups : உள்ளிணைந்த குழுக்கள்;உள்ளிணைந்த உரிமைத் தொகுதிகள் : விண்டோஸ் என்டி வழங்கன், விண்டோஸ் என்டி உயர் நிலை வழங்கன் அமைப்பில் உள்ளிருப்பாய் உள்ள உரிமைத் தொகுதிகள். பிணைய அமைப்பில் ஒவ்வொரு பயனாளருக்கும் குறிப்பிட்ட பணிகளைச் செய்வதற்காக அனுமதியும் உரிமைகளுமே வழங்கப்படுகின்றன. அத்தகைய உரிமைகளுள் குறிப்பிட்ட சிலவற்றை ஒரு தொகுதியாக வைத்துக் கொள்வதால், ஒரு பயனாளருக்கு அத்தொகுதி உரிமையை வழங்குவது எளிமையாக இருக்கும். குறிப்பிட்ட பொதுவான உரிமைகள் பெற்ற பயனாளர் குழுக்களை உருவாக்குவதும் எளிதானது.

built-in pointing device : உள்ளிணைந்த சுட்டுச் சாதனம்.

bulk eraser : முழுக்க நீக்கல்;முற்றத் துடைத்தல்;ஒட்டு மொத்தமாய் அழித்தல் : நெகிழ் வட்டு, நாடா போன்ற சேமிப்பு ஊடகங்களிலுள்ள தகவல் அனைத்தையும் ஒட்டு மொத்த மாய் அழிக்கப் பயன்படும் செயல் முறை அல்லது ஒரு சாதனம். வட்டு, நாடா ஆகியவற்றில் மின்காந்த முறையில் தகவல் பதியப்படுகிறது. எனவே, சக்தி வாய்ந்த மின்காந்த்ப் புலத்தை உருவாக்குவதன் மூலம் மின்காந்த ஊடகத்